Sbs Tamil - Sbs
மருந்து விலையை ஆஸ்திரேலிய அரசு குறைப்பதை அமெரிக்கா ஏன் எதிர்க்கிறது?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:09:03
- More information
Informações:
Synopsis
ஆஸ்திரேலிய மருந்துகளுக்கு வரி விதிக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்க மருந்து தயாரிப்பாளர்கள் குழு வலியுறுத்தியுள்ளது. Pharmaceutical Benefits Scheme (PBS) என்ற எமது நாட்டின் மருந்துகளை மலிவாக விற்க மானியங்கள் வழங்கும் திட்டம், அமெரிக்க நிறுவனங்களுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்று அவை வாதிடுகின்றனர். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக PBS திட்டத்தின் கீழ் மருந்து விலைகளைக் குறைப்பதாக இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் உறுதியளித்துள்ள நிலையில் இந்த முறையீடு வந்துள்ளது. வரி அதிகரிப்புகளை அமெரிக்க அரசு அறிமுகப்படுத்துவதால் ஏற்படும் பதட்டங்களுக்கு மத்தியில் Labor கட்சியும் Coalition எதிர்க் கட்சிகளும் PBS திட்டத்தைப் பாதுகாக்கப் போவதாக உறுதியளித்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.