Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
நாட்டின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!
30/09/2025 Duration: 02minஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Coles மற்றும் Woolworthsக்கு போட்டியாக கேரள முதலாளியை களமிறக்க விரும்பும் ஆஸ்திரேலிய பிரதமர்!
30/09/2025 Duration: 02minLuLu hypermarket கிளையை ஆஸ்திரேலியாவில் தொடங்குமாறு பிரதமர் Albanese அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 30 செப்டம்பர் 2025 செவ்வாய்க்கிழமை
30/09/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 30/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
How do you legally change your name in Australia? - ஆஸ்திரேலியாவில் உங்கள் பெயரை மாற்றுவதற்கான நடைமுறைகள் எவை?
29/09/2025 Duration: 09minChoosing to legally change your name is a significant life decision that reflects your personal circumstances. Each year, tens of thousands of Australians lodge an application through the Registry of Births, Deaths & Marriages. If you’re considering a change of name, this episode takes you through the process. - உங்களது பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயர் அல்லது குடும்பப் பெயரை எப்படி மாற்றுவது என்பது குறித்து Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி : அமெரிக்காவின் விசா கெடுபிடி ஆஸ்திரேலியாவிற்கு வாய்ப்பாக அமையுமா?
29/09/2025 Duration: 07minஅமெரிக்காவின் skilled migrant visa - திறமை அடிப்படையில் குடிபெயர்வோருக்கான விசா விண்ணப்பக் கட்டணத்தை $100,000 அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தது ஆஸ்திரேலியாவிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வாங்குகிறார் செல்வி.
-
செக்ஸ்: தாம்பத்திய உறவில் ஏற்படுத்தும் சிக்கல்கள் என்ன?
29/09/2025 Duration: 12minடாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரில் செக்ஸ் என்பது திருமண உறவில் ஏற்படுத்தும் சிக்கல் குறித்து விளக்குகிறார். தொடரின் ஒன்பதாம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
இன்றைய செய்திகள்: 29 செப்டம்பர் 2025 திங்கட்கிழமை
29/09/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 29/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
29/09/2025 Duration: 08minலடாக்கில் மாநில அந்தஸ்து வழங்க கோரி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் பலி; கரூரில் தமிழக வெற்றிக்கழகம் பிரச்சார கூட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம், 'திட்டமிட்ட சதி' என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
கரூர் துயரம்: Gen Z இளைஞர்களின் திரைப்பட ஈர்ப்பு குறித்த பார்வை
28/09/2025 Duration: 11minதமிழ்நாட்டில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தின் போது 40 பேர் உயிரிழந்த சம்பவம் பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்களை தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது. தமிழக அரசியலைக் கவனித்து வரும் பேராசிரியர் கிளாட்ஸ்டன் சேவியர் Gen Z இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு, ரசிக மனப்பான்மை, நடிகர்களாக இருந்து அரசியல் தலைவர்களாக உருவெடுத்தவர்கள் நடத்திய கூட்டங்கள் பற்றி அலசுகிறார். அவரோடு உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
நடிகர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் 39 பேர் பலி: பெருந்துயரத்தின் பின்னணி
28/09/2025 Duration: 06minதமிழ்நாட்டில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இச்சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (21 – 27 செப்டம்பர் 2025)
26/09/2025 Duration: 05minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (21 – 27 செப்டம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 27 செப்டம்பர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
செய்தியின் பின்னணி : சர்வதேச மாணவர்கள் சேர்க்கையில் வீழ்ச்சி? ஏன்?
26/09/2025 Duration: 08minஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை மிகுந்த வீழ்ச்சியடைந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இது நாட்டின் பொருளாதாரத்துக்கும் கல்வித் துறைக்கும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குபவர் செல்வி.
-
பதற்றம்: காரணிகளும் தீர்வுகளும் நூல் வெளியீடு
26/09/2025 Duration: 09minமெல்பனைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் மற்றும் எழுத்தாளர் பிரின்ஸ் கென்னட் அவர்களது இரண்டாவது நூல் வெளியீட்டு விழா செப்டம்பர் 27 சனிக்கிழமை நடைபெறுகிறது. இதுதொடர்பில் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 26 செப்டம்பர் 2025 வெள்ளிக்கிழமை
26/09/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
26/09/2025 Duration: 08minஅதிபர் அனுரகுமார திசநாயக்க பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. மேலும் மன்னார் காற்றாலை, திருகோணமலை விவசாய மக்களின் தொடரும் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு
25/09/2025 Duration: 08minகாசா மீது தொடரும் தாக்குதல்கள்; பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த முக்கிய நாடுகள்; டென்மார்க்கில் ட்ரோன் ஊடுருவல்கள் முயற்சி: ரஷ்ய தலையீடா?; அமெரிக்கா: H1B விசா கட்டண உயர்வு; நாடு திரும்பிய 10 லட்சம் சிரிய அகதிகள்; ஆப்கானிஸ்தானில் விமானத்தளத்தை திரும்ப பெற முயற்சிக்கும் அமெரிக்கா; ரகாசா புயல் பாதிப்பு உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
அரசு அலுவலகங்களுக்கு தொந்தரவு அழைப்புகளை மேற்கொண்ட நபருக்கு சிறைத்தண்டனை
25/09/2025 Duration: 02min1100-க்கும் மேற்பட்ட தொந்தரவு அழைப்புகளை மேற்கொண்ட நபருக்கு மேற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி: குடியேற்றவாசி & அகதிகளுக்கு எதிர்ப்பு அதிகரிக்க என்ன காரணம்?
25/09/2025 Duration: 10minஐரோப்பிய நாடுகளில் குடியேற்றவாசிகளுக்கும், அகதிகளுக்கும் எதிராக எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த எதிர்ப்பு மனநிலை உயர என்ன காரணங்கள்? இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
கற்றாழையின் மருத்துவ பயன்கள்!!
25/09/2025 Duration: 09minஇயற்கையின் கொடைகள் பல, அவற்றுள் ஒன்று கற்றாழை. இயற்கையாக வளரும் கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன என்றும் எப்படி கற்றாழையை பயன்படுத்த வேண்டும் என்றும் விளக்குகிறார் சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி. அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 25 செப்டம்பர் 2025 வியாழக்கிழமை
25/09/2025 Duration: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 25/09/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.