Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 59:20:46
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு

    15/05/2025 Duration: 08min

    இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையிலான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு; மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்; துருக்கியில் ரஷ்யா- உக்ரைனுக்கு இடையிலான பேச்சுவார்த்தை; காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்; இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்றியுள்ள சீனா; சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பில் கையெழுத்திட்ட கொலாம்பியா உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • தனித்துவமான தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள் என்ன? மாமன்னன் ராஜராஜசோழனின் பெருமைகள் என்ன?

    15/05/2025 Duration: 09min

    தமிழ்நாட்டில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அவற்றில் தனித்துவமானது தஞ்சை பெரிய கோவில்.பல சிறப்புகளைக் கொண்ட தஞ்சை பெரியகோவிலின் சிறப்பு என்ன என்பதையும், மாமன்னன் ராஜராஜசோழனின் பெருமைகளையும் S.K.ஸ்ரீதர் அவர்கள் விளக்குகிறார். மாமன்னர் ராஜராஜசோழன் வரலாறு மற்றும் ஆய்வு மையத்தின் செயலாளர் S.K.ஸ்ரீதர் ஆவார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • அமெரிக்க-சீன வர்த்தக வரி குறைப்பு ஏன் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல செய்தி?

    15/05/2025 Duration: 06min

    அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையே நடந்து வரும் வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுகின்றன. இரு நாடுகளும் மாறி மாறி விதித்த வர்த்தக வரிகளை தற்போது குறைத்துக்கொள்ள ஒத்துக்கொண்டுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

  • நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்வதால் வருகின்ற பாதிப்புகள் யாவை?

    15/05/2025 Duration: 11min

    நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்வதால் நமது உடலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக்கொள்வது மேலும் உடற்பற்சியால் வருகின்ற நன்மைகள் குறித்து நமது தயாரிப்பாளர் செல்வியுடன் உரையாடுகிறார் அடிலெய்டு நகரில் physiotherapist-ஆக பணிபுரிந்து வரும் திரு சிவகுமார் கோபாலகிருஷ்ணன்.

  • முதியோரில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு: தீர்வு என்ன?

    15/05/2025 Duration: 13min

    ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது முதியோர் எதிர்நோக்கும் மிகமுக்கிய பிரச்சினைகளில் ஒன்று. ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் சிக்கல்கள் எவை? இக்குறைபாட்டிற்கு தீர்வு என்ன என்பது உட்பட சில முக்கிய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் முதியோர்நல மருத்துவ நிபுணர் மற்றும் Conjoint Senior Lecturer(School of Medicine- Western Sydney University) Dr பீட்டர் குருசுமுத்து அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன் முதலான உருவாக்கப்பட்ட ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது

    15/05/2025 Duration: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 15 மே 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • இவ்வருட குளிர் காலத்தில் அதிக மழை பெய்யும் வாய்ப்பு

    14/05/2025 Duration: 05min

    நாட்டின் பல பகுதிகளில், இந்த வருட குளிர் காலத்தில் அதிக மழை பெய்யும் என முன்கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் வருகிற நாட்களில் மழை மற்றும் பலத்த காற்று நிலவக்கூடும். இது பற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Victim Support Services - பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி சேவைகளை எவ்வாறு பெறுவது?

    14/05/2025 Duration: 08min

    வன்முறை அல்லது குற்றச்செயல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் Victim Support Services - பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி சேவைகளை பெறலாம். Victim Support Services என்றால் என்ன? அதற்கு தகுதியானவர்கள் யார்? அதனை எவ்வாறு அணுகுவது? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் குடும்ப நல வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் விஜி வீராசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி

    14/05/2025 Duration: 07min

    தமிழக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு; இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சிக்கலின் தற்போதைய நிலவரம்; கன்னியாகுமரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு; ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்தும் இந்தியா உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • பிரதமர் இன்று ஜகார்த்தா புறப்படுகிறார்

    13/05/2025 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 14/05/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

  • லிபரல் கட்சியின் முதலாவது பெண் தலைவராக வரலாறு படைக்கிறார் Sussan Ley!

    13/05/2025 Duration: 07min

    லிபரல் கட்சியின் புதிய தலைவராக Sussan Ley தெரிவுசெய்யப்பட்டதையடுத்து அக்கட்சியின் முதலாவது பெண் தலைவராக அவர் வரலாறு படைத்துள்ளார். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலிய அரசிடம் நட்டஈடுகோரி அகதி ஒருவர் தாக்கல்செய்த வழக்கு: முழுமையான விவரம்

    13/05/2025 Duration: 02min

    ஐந்து வருட குடிவரவு தடுப்புக்காவலினால் ஏற்பட்ட மனநல பாதிப்புகளுக்கு நட்ட ஈடு கோரி, அரசுக்கெதிராக வழக்குத் தொடர, ஈரானிய அகதி ஒருவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதுகுறித்த செய்தியை வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • லேபர் அரசின் புதிய அமைச்சரவை பதவியேற்றது!

    13/05/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 13/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • புதிய அமைச்சரவை அறிவிப்பு: யாருக்கு என்னென்ன பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன?

    12/05/2025 Duration: 02min

    ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் Anthony Albanese தனது புதிய அமைச்சரவையை இன்று அறிவித்தார். இதுகுறித்த செய்தியை வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    12/05/2025 Duration: 09min

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்! இந்திய ராணுவத்திற்கு குவியும் ஆதரவு - பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு; தமிழக அரசியலில் பரபரப்புகளை ஏற்படுத்தும் பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடு; நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • புதிய அமைச்சரவை அறிவிப்பை பிரதமர் Albanese இன்று வெளியிடுகிறார்!

    12/05/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 12/05/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • The Wrong Gods - A Stirring Tale of Tradition and Transformation - “The Wrong Gods” (தவறான கடவுள்கள்) – பாரம்பரியம் மற்றும் மாற்றம் மோதும் ஒரு நாடகம்

    11/05/2025 Duration: 11min

    The Wrong Gods is a powerful theatrical production that delves into the intricate dynamics of family, the generational divide, and the timeless tension between tradition and change. Written by acclaimed playwright S. Shakthidharan, the play is set in a serene Indian village nestled on the banks of a sacred river. There, a young girl dares to dream of a life beyond the rigid expectations of her heritage, challenging the beliefs that have shaped her world—and confronting the cost of choosing one’s own path. Kulasegaram Sanchayan talks to playwright S. Shakthidharan about this play and his future ventures. - “The Wrong Gods” எனும் நாடகம், பாரம்பரியத்தின் கட்டுப்பாடுகளுக்கும், மாற்றத்தின் தேவைப்பாடுகளுக்கும் இடையிலான தடுமாற்றங்களை செவ்வனே சித்தரிக்கும் ஓர் ஆழமான கலைக் காட்சி. புகழ்பெற்ற நாடக ஆசிரியர் S. சக்திதரன் எழுதிய இந்த நாடகம், இந்தியாவின் ஒரு புனித நதிக்கரையை ஒட்டிய அமைதியான கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த கதையின் மையத்தில், தன் சமூகத்தின் கடுமையான பாரம்பரியக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக

  • புதிய பாப்பரசர், லியோ XIV ஆகிய ராபர்ட் பிரீவோஸ்ட் யார்?

    10/05/2025 Duration: 08min

    கத்தோலிக்க மதத்தின் புதிய தலைவரான, புதிய பாப்பரசர், புனித பதின்நான்காம் லியோ ஆன, ராபர்ட் பிரீவோஸ்ட் யார் என்ற செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    10/05/2025 Duration: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (04 மே – 10 மே 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 10 மே 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • How to enjoy Australia’s wilderness areas responsibly - ஆஸ்திரேலியாவின் இயற்கை எழிலை பொறுப்புடன் அனுபவிப்பது எப்படி?

    09/05/2025 Duration: 10min

    Australia’s beautiful landscape is home to a stunning array of native plants and wildlife, and if you’re heading out to explore, it’s important to be a careful and respectful visitor. - நீங்கள் ஆஸ்திரேலிய வனப்பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிடும்போது, அந்தப் பகுதியின் இயற்கை மற்றும் கலாச்சார விழுமியங்கள் குறித்து கவனமாகவும் மரியாதையுடனும் இருப்பது ஏன் முக்கியம் என்பது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்

page 2 from 24