Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
நாட்டின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!
01/04/2025 Duration: 02minஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் நான் றேனுகா துரைசிங்கம்.
-
குயின்ஸ்லாந்தில் சாலை விதிமீறல்களுக்கான அபராதம் அதிகரிப்பு!
01/04/2025 Duration: 02minகுயின்ஸ்லாந்து மாநிலத்தில் சாலை விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதங்கள் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நாட்டில் மீண்டும் வீடுகளின் விலை அதிகரிப்பு!
31/03/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 01/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
Why are we debating Welcome to Country? - SBS Examines : 'Welcome to Country' குறித்து நாம் இப்போது விவாதிப்பது ஏன்?
31/03/2025 Duration: 07minThe government's Welcome to Country spending has been heavily criticised but some believe the cultural protocol is being used as a "political football". - Welcome to Country பூர்வீகக்குடியின சடங்கு விழாவிற்கு அரசு செலவளித்துள்ள பணத்தொகை தற்போது பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட்ட பிறகு Welcome to Country விழா சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
-
தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கின !
31/03/2025 Duration: 09minநாடாளுமன்றத் தேர்தல் மே 3ஆம் தேதி நடக்க இருக்கும் பின்னணியில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
31/03/2025 Duration: 10minசத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை, திமுக Vs தவெக - முற்றி வரும் மோதல், 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
-
நாட்டில் லேபர்கட்சியின் செல்வாக்கு சற்று அதிகரிப்பு: கருத்துக்கணிப்பு முடிவு
31/03/2025 Duration: 03minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 31 மார்ச் 2025 திங்கட்கிழமை. வாசித்தவர். றேனுகா துரைசிங்கம்.
-
செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல் – சுய இன்பம்
30/03/2025 Duration: 13minடாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரின் மூன்றாம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
ரமலான் தரும் செய்தியும், இஸ்லாமியர்களின் தற்போதைய சவால்களும்!
30/03/2025 Duration: 18minரமலான் குறித்த சிறப்பு கலந்துரையாடல். ரமலான் உலகுக்கு தரும் செய்தி, ரமலான் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திய மாற்றங்கள், தமிழ்-முஸ்லீம் அடையாளம், நோன்பு நாட்களில் முஸ்லீம்கள் வேலைத் தளங்களில் எதிர்கொள்ளும் சவால், Islamophobia எனப்படும் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தவர்களுக்கு எதிராக நாட்டில் அதிகரிக்கும் போக்கு என்று பல அம்சங்கள் குறித்த கலந்துரையாடல். இதில் கலந்துகொள்கின்றவர்கள்: ஹாலித் முஹம்மது, ஷாபாத் அஹமத், பீமா ஜான் யூசுப், ஆபிதா ஷாஹற், ரைஸ் இஸ்மாயில், பஷீர் ஆகமது, சித்தி பர்ஸானா, ஷஹ்பான் அலி ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
How far can you legally go to protect yourself from robbery in Australia? - கொள்ளை மற்றும் திருட்டிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
30/03/2025 Duration: 10minIn Australia, robbery isn't just theft; it has specific legal definitions and consequences. This episode of Australia Explained podcast explores the types of crimes, including stealing. What does it mean legally? How can you protect yourself? And what support is available if it happens to you? - கொள்ளை மற்றும் திருட்டிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பிலும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கே உதவிபெறலாம் என்பது தொடர்பிலும், Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
28/03/2025 Duration: 06minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (23 – 29 மார்ச் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 29 மார்ச் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிப்பு:ART முடிவுக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியது
28/03/2025 Duration: 02minஆஸ்திரேலியாவில் அகதி தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்பிலான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Stem cell (குருத்தணு) பெறுவதில் ஆஸ்திரேலிய தமிழர் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்ன?
28/03/2025 Duration: 12minகடந்த வருட இறுதியில், இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட 28 வயதான நிமலன் சுந்தரம் என்பவருக்கு T-cell Acute Lymphoblastic Leukemia எனும் அரிய வகை இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. திடகாத்திரத்துடன் வாழ்ந்து வந்த அவருக்கு இந்தப் புற்று நோய் வந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது அவரையும் அவரது குடும்பத்தவரையும் உலுக்கியிருந்தது. இருந்தாலும், அவரது நோயைக் குணப்படுத்த குருத்தணு என்று அறியப்படும் stem cell சிகிச்சை தேவைப்படலாம் என்றும், அதற்கு ஒத்த மரபணு உள்ள ஒருவர் அதனைத் தானம் செய்ய வேண்டும் என்றும் கேள்விப்பட்டதும் அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி பிறந்திருக்கிறது. ஆனால், இலங்கை, இந்திய பின்னணி கொண்டவர்கள், அதிலும் குறிப்பாக தமிழ் பின்னணி கொண்டவர்கள் குருத்தணு தானம் செய்யும் பதிவேட்டில் அதிகளவில் இல்லை என்று கேள்விப்பட்டதும் நிமலனுக்கு மட்டுமல்ல, இனிமேல் அது தேவைப்படும் தமிழ் பின்னணி கொண்டவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற சிந்தனையில் அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்கள் நிமலன் சுந்தரம் அவர்களின் குடும்பத்தினர். இது குறித்து, நிமலன் சுந்தரம் அவர்களின் பெற்றோர் விதுரன் சுந்தரம் மற்றும் செந்த
-
Stem cell (குருத்தணு) தானம் செய்ய ஏன் பலர் முன்வருவதில்லை?
28/03/2025 Duration: 16minசிலரது நோயைக் குணப்படுத்த குருத்தணு என்று அறியப்படும் stem cell சிகிச்சை தேவைப்படலாம். அதற்கு அவருக்கு ஒத்த மரபணு உள்ள ஒருவர் அதனைத் தானம் செய்ய வேண்டும். ஆனால், இலங்கை, இந்திய பின்னணி கொண்டவர்கள், அதிலும் குறிப்பாக தமிழ் பின்னணி கொண்டவர்கள் குருத்தணு தானம் செய்யும் பதிவேட்டில் அதிகளவில் இல்லை என்று தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது குறித்து, ஆஸ்திரேலியாவில் நாற்பது வருடங்களுக்கு மேல் ஒரு இரத்தவியல் நிபுணராகக் கடமையாற்றும் Dr ஆறுமுகம் மனோகரன், AM அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
28/03/2025 Duration: 08minகருணா, பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை அமைந்துள்ளார்கள்; வவுனியாவில் இந்தியா - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை இடம்பெற்றது; இலங்கையின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு பிரிட்டன் பயணத்தடை விதித்துள்ளது – இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
தேர்தல் அறிவித்தலின் பின் ஆளுநர் Sam Mostyn நாடாளுமன்றத்தைக் கலைத்தார்
27/03/2025 Duration: 05minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 28 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3 சனிக்கிழமை!
27/03/2025 Duration: 02minஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
எதிர்கட்சியின் பதில் நிதிநிலை அறிக்கையில் என்ன அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன?
27/03/2025 Duration: 08minநேற்றிரவு பெடரல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் Peter Dutton 2025-26 நிதியாண்டிற்கான பதில் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். வாழ்க்கைச் செலவை சமாளிக்கும் திட்டங்கள், குடிவரவு எண்ணிக்கை குறித்த திட்டம் மற்றும் நலத்துறை மேம்பாடு என பல அம்சங்களை அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3 - அரசு வட்டாரம்!
27/03/2025 Duration: 02minஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவில் 485 TR விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடம்!
27/03/2025 Duration: 02minஆஸ்திரேலியாவில் 485 Temporary Graduate விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.