Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 59:20:46
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • 65 வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம்: பெர்த் பெண்மணி சாதனை!

    09/05/2025 Duration: 13min

    பெர்த்தில் வாழும் சட்டத்தரணி சாந்திகா பவானி யோகேந்திரன் அவர்கள், தனது 65வது வயதில் பரதநாட்டிய அரங்கேற்றத்தை செய்துள்ளார். இது தொடர்பில் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    09/05/2025 Duration: 08min

    உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு பின்னடைவு; தேர்தல் முடிவுகள் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களின் கருத்து; இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கருத்துக்கு வரவேற்பு உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Liberal கட்சித் தலைமைத்துவத்திற்கான போட்டியில் Sussan Ley

    09/05/2025 Duration: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 09 மே 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • புதிய பாப்பரசர் தேர்வுசெய்யப்பட்டார்!

    08/05/2025 Duration: 03min

    ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து புதிய பாப்பரசர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு

    08/05/2025 Duration: 07min

    தொடரும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்; உக்ரைனுடான போரை மூன்று நாட்கள் நிறுத்தியுள்ள ரஷ்யா; காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்; ஏமனின் ஹவுதிகள்- அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்; சூடான் துறைமுக நகர் மீது தாக்குதல் உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • காப்பீட்டு பணத்திற்காக மனைவியைக் கொன்றாரா? குயின்ஸ்லாந்து பெண்ணின் மரணத்தில் திருப்பம்!

    08/05/2025 Duration: 02min

    குயின்ஸ்லாந்தில் ஒரு பெண்ணின் மரணம் முதலில் விபத்து என கருதப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது கணவர் மீது கொலை மற்றும் காப்பீட்டு மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • UNESCOவின் உலக பாரம்பரிய தகுதி கிடைத்த ஆஸ்திரேலியாவின் Opera House உருவான கதை

    08/05/2025 Duration: 09min

    ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரமாண்டமான சிட்னி ஓபரா அரங்கம் (Opera House) உருவான கதை, அதை வடிவமைத்த கலைஞனுக்கு நேர்ந்த அனுபவம், சிட்னி துறைமுக பாலம் உருவான பின்னணி, அது திறந்துவைக்கப்பட்டபோது நடந்த சம்பவம் என்று அடுக்கடுக்கான தகவல்களை முன்வைக்கிறார் “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள்.

  • ‘எந்திரன்கள் கூட மனிதத்துவம் பெறலாம்’

    08/05/2025 Duration: 12min

    ‘சுஜாதாவின் அறிவியல் நாவல்களில் எதிர்காலவியலும் மனித சிக்கல்களும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர் மணிமேகலை அவர்கள் 2018ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்த வேளை, எமது நிலையக் கலையகத்தில் குலசேகரம் சஞ்சயன் சந்தித்து உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.

  • இந்தியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தப்படும் – பாகிஸ்தான் பிரதமர்

    08/05/2025 Duration: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 8 மே 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • Greens தலைவர் Adam Bandtன் தோல்வியின் பின்னணி என்ன?

    07/05/2025 Duration: 06min

    15 வருடங்களாக மெல்பன் தொகுதியை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய Greens கட்சியின் தலைவர் Adam Bandt, 2025 பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்?. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Election analysts say Greens leader Adam Bandt has lost his seat of Melbourne, which he's held since becoming the party's first lower house member in 2010.

  • எதிர்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனை தோற்கடித்த அலி பிரான்சின் பின்னணி என்ன?

    07/05/2025 Duration: 12min

    ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்கட்சித் தலைவரான பீட்டர் டட்டன் அவர்கள் தோல்வி கண்டார். லேபர் கட்சியின் அலி பிரான்ஸ் அவர்கள் வெற்றி பெற்றார். அலி பிரான்ஸ் யார் என்று விளக்கும் செய்தியின் பின்னணி நிகழ்ச்சி. முன்வைக்கிறார்: றைசெல்.

  • இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி

    07/05/2025 Duration: 08min

    இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மோடி அரசு ஒப்புதல்; தன்னைக் கொல்ல சதி நடந்ததாக கூறிய மதுரை ஆதீனம்; கிரானைட் குவாரி முறைகேடு வழக்கு விவகாரத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் என்று சகாயம் IAS கூறுவது; இந்தியாவில் 88 சதவீத குடும்பங்களுக்கு கார் வாங்கும் வசதி இல்லை என்ற கருத்து; இந்தியா முழுவவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • முக்கிய கட்சிகள் அல்லாதவர்களுக்கு இந்த தேர்தலில் என்ன நடந்தது?

    07/05/2025 Duration: 07min

    கடந்த சனிக்கிழமை நடந்த பெடரல் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தயாராகும் நிலையில் கிரீன்ஸ் மற்றும் சுயேட்சை போட்டியாளர்களின் தேர்தல் முடிவுகள் குறித்த செய்திகளின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்: விரிவான செய்தி

    07/05/2025 Duration: 05min

    பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியதாக வந்துகொண்டிருக்கும் செய்தியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • What to expect when taking your child to the emergency department - குழந்தையை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுசெல்லும்போது கவனிக்க வேண்டியவை

    07/05/2025 Duration: 10min

    Visiting the emergency department with a sick or injured child can overwhelm parents due to long wait times and stress. Understanding what to expect can help. This episode explores when to go to children's hospital emergency departments in Australia and what to expect upon arrival. - நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த குழந்தையை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுசெல்லும்போது கவனிக்கவேண்டிய விடயங்கள் தொடர்பில் Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவில் தமிழர் தற்காப்புக் கலை “களரி” பயிலும் குழு!

    07/05/2025 Duration: 16min

    களரிப்பயிற்று என்று அழைக்கப்படும் தமிழர் தற்காப்புக் கலை தற்போது எளிமையாக “களரி” என்று அழைக்கப்படுகிறது. களரி கலையை சிட்னி நகரில் பயின்றுவரும் அல்லது கற்பித்துவரும் குழுவோடு ஒரு சந்திப்பு. கலந்துரையாடுகின்றனர்: முனைவர் மிருனாளினி நிதிவாணன், ஜெயசீதா அரவிந்த், தமர்க்சனா நிதிவாணன், நிதிவாணன் பரந்தாமன் (பின் வரிசை); கல்விபிரன் நிதிவாணன், இனிமை அரவிந்த் (முன்வரிசை). இவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடியவர்: றைசெல்.

  • புதிய அமைச்சர்கள்: லேபர் கட்சியின் caucus கூட்டம் வெள்ளிக்கிழமை

    06/05/2025 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 07/05/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

  • NSW ஓட்டுநர்களைக் கண்காணிக்க ஆரம்பித்துள்ள Point-to-point கமராக்கள்!

    06/05/2025 Duration: 02min

    நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் இரண்டு பெரும் நெடுஞ்சாலைகளில் average speed கமராக்கள்/ Point-to-point speed கமராக்கள் ஊடாக அனைத்து ஓட்டுநர்களின் வேகமும் கண்காணிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் யார்?

    06/05/2025 Duration: 03min

    ஆஸ்திரேலிய வரலாற்றில் முதல்தடவையாக தனது சொந்த தேர்தல் தொகுதியில் தோல்வியடைந்த எதிர்க்கட்சித் தலைவராக பீட்டர் டட்டன் ஆன பிறகு, லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • அனைத்து முடிவுகளும் தெரியும்வரை புதிய அமைச்சரவையை அறிவிக்கமாட்டேன் - பிரதமர்

    06/05/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 06/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

page 3 from 24