Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 130:03:09
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • இன்றைய செய்திகள்: 15 செப்டம்பர் 2025 திங்கட்கிழமை

    15/09/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 15/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • செய்தியின் பின்னணி : ஆஸ்திரேலியாவில் வார இறுதியில் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்!

    15/09/2025 Duration: 07min

    வார இறுதியில் நாட்டின் அனைத்து தலைநகரங்கள் மற்றும் சில பிராந்திய பகுதிகளில், பல்வேறு கருத்துக்களை முன்வைக்கும் இரு மாறுபட்ட குழுக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    14/09/2025 Duration: 09min

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கும் எதிர்க்கட்சிகள்; 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50' - தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா; திருச்சியில் பிரச்சார பயணத்தை தொடங்கிய த.வெ.க. தலைவர் விஜய் - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு - தமிழக அரசியலில் அதிர்வு அலைகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • ஆஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற Papua New Guineaக்கு நாளை வயது 50!

    14/09/2025 Duration: 13min

    ஆஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற Papua New Guinea நாடு தனது 50ஆவது சுதந்திர தினத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16 September 2025) கொண்டாடுகிறது. அந்த நாடு எப்படி சுதந்திரம் பெற்றது, அது இன்று எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • இந்த வார செய்திகள்: ஆஸ்திரேலியா & உலகம்

    13/09/2025 Duration: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (7 – 13 செப்டம்பர் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 13 செப்டம்பர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • ஆஸ்திரேலியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு காரணமாகும் முக்கிய உயிரினம் எது

    12/09/2025 Duration: 02min

    ஆஸ்திரேலியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு காரணமாகும் உயிரினங்கள் எவை என்ற புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியர்கள் எந்த brand-ஐ அதிகம் நம்புகின்றனர்?

    12/09/2025 Duration: 02min

    ஆஸ்திரேலியர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்ட பெரிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Roy Morgan தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • NSW மாநிலத்தில் தற்கொலை தடுப்பு புதிய சட்டங்கள்!

    12/09/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 12/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.

  • நேபாள அரசியல் நெருக்கடி: அடுத்தது என்ன?

    12/09/2025 Duration: 08min

    நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான் இளைஞர் யுவதிகள் வீதியில் இறங்கி போராட்டம் ஒன்றை கடந்த திங்களன்று ஆரம்பித்தார்கள். இதன் பின்னணியை எடுத்துவருகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • செய்தியின் பின்னணி: மில்லியன் டாலர் பரிசு- Dezi Freeman யாரின் கையில் சிக்கப் போகிறார்?

    12/09/2025 Duration: 08min

    விக்டோரியா மாநிலத்தில் இரண்டு காவல்துறையினர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் Dezi Freeman என்ற குற்றச்சாட்டுக்குள்ளான நபரை கைது செய்ய விக்டோரியா காவல்துறையினர் ஒரு மில்லியன் டாலர் பரிசு அறிவித்துள்ளனர். இச் செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்

    11/09/2025 Duration: 08min

    முன்னாள் அதிபர்களுக்கு அரசு வழங்கிய வரப்பிரசாதங்களை நீக்கும் சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்; இவ்வருட இறுதிக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு

    11/09/2025 Duration: 07min

    நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டமும் ஆட்சி கவிழ்ப்பும்; காசா மீதான போரை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்; கத்தாருக்குள் இஸ்ரேல் தாக்குதல்; டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை; கொரிய நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யத் தயங்கும்-தென் கொரிய அதிபர்; அமெரிக்காவின் வர்த்தக அழுத்தம் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • நேபாளத்தில் என்ன நடக்கிறது? அங்குள்ள தமிழ் மாணவி தரும் தகவல்

    11/09/2025 Duration: 09min

    நேபாளத்தில் சமூக ஊடக தடைக்கு எதிராக தொடங்கிய இளம் தலைமுறையினரின் போராட்டம் அந்நாட்டு அரசையே ஆட்டம் காண வைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை நேபாளத் தலைநகர் காத்மண்டுவிலிருந்து பகிர்ந்துகொள்கிறார் வைஷ்ணவி. அவரோடு உரையாடுகிறார் றைசல்

  • நம்மவர் நம்மோடு: “பாப் சக்கரவர்த்தி” A.E. மனோகர்

    11/09/2025 Duration: 10min

    தமிழில் பாப் இசை மூலம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களைக் கவர்ந்தவர் மறைந்த பிரபல பாப் இசை பாடகர் A.E. மனோகர் அவர்கள். “பாப் சக்கரவர்த்தி” என்று அழைக்கப்படும் மனோகர் சிலோன் பாப் தமிழிசையையும், தமிழ், சிங்களம் கலந்த பாப் பாடல்களையும் உலகெங்கும் பரவச் செய்ததில் பெரும் பங்காற்றியவர். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரோடு நாம் நடத்திய நேர்முகத்தின் மறு பதிவு. உரையாடியவர்: றைசெல்.

  • செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலிய பெண்கள் ஆண்களைவிட அதிக நாட்கள் வாழ்கிறார்கள், ஆனால் அதுவே நல்ல செய்தி அல்ல!

    11/09/2025 Duration: 08min

    ஆஸ்திரேலியாவில் ஆண்களைவிட பெண்கள் அதிக நாட்கள் வாழ்கின்றார்கள் என்ற புள்ளி விவரத்தை ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் நலவாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல். ஆங்கில மூலம்: SBS Newsயின் Peggy Giakoumelos.

  • நீங்கள் நலமா என்று விசாரிப்பது ஏன் முக்கியம் : R U OK

    11/09/2025 Duration: 12min

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை RUOK தினம் கடைபிடிக்கப்படுகிறது. RUOK - நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பது ஒருவரின் மனநல ஆரோக்கியத்தை எவ்வாறு உறுதிசெய்கிறது மற்றும் இதன் அவசியம் என்ன? என பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் மனநல ஆலோசகராக பணியாற்றும் அன்புமொழி குப்புசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • இந்திய குடியேற்றவாசிகள் பற்றி சர்ச்சையான கருத்தை கூறிய செனட்டர் பிரைஸ் பதவி இழந்தார்

    11/09/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 11/09/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

  • சிட்னி புதுவருட வாணவேடிக்கையைப் பார்வையிடுவதற்கான இலவச டிக்கட்டுகள்!

    10/09/2025 Duration: 02min

    சிட்னி புத்தாண்டு கொண்டாட்ட வாணவேடிக்கையை இலவசமாக பார்வையிடுவதற்கு நுழைவுச்சீட்டுக்களைப் பெறுவதற்கான வலைத்தளம் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மல்லிகைச் சரத்துடன் மெல்பன் வந்த இந்திய நடிகைக்கு அபராதம்!

    10/09/2025 Duration: 02min

    ஆஸ்திரேலியா வரும்போது மல்லிகைப்பூ சரத்தைக் கொண்டுவந்த இந்திய நடிகைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • சிட்னியில் மேடையேறுகிறது கேதாரன் பார்த்தீபனின் 'Twice Upon a Time'

    10/09/2025 Duration: 08min

    சிட்னியைச் சேர்ந்த கேதாரன் பார்த்தீபன் எழுதி இயக்கிய தமிழ்–ஆங்கில இருமொழி நாடகமான 'Twice Upon a Time' எதிர்வரும் செப்டம்பர் 20 அன்று UNSW-இல் மேடையேறுகிறது. இதுதொடர்பில் கேதாரன் பார்த்தீபனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

page 4 from 52