Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 63:23:10
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • குவாண்டாஸ் இலவச மேம்படுத்தல்கள் - பிரதமர் மீது குற்றச்சாட்டு

    29/10/2024 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 30/10/2024) செய்திகள். வாசித்தவர்:மகேஸ்வரன் பிரபாகரன்.

  • சிட்னியில் குத்திக் கொல்லப்பட்ட பிரபா அருண் குமார்: தகவல் தருபவர்களுக்கு $1 மில்லியன் பரிசு!

    29/10/2024 Duration: 02min

    கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு சிட்னி மேற்கில் வைத்து இந்தியப்பெண் பிரபா அருண் குமார் கொலைசெய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கைத் தீர்க்க உதவும் புதிய தகவல்களைத் தருபவர்களுக்கு 1 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவில் வீட்டு விலை வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளது

    29/10/2024 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 29/10/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • குயின்ஸ்லாந்து மாநில தேர்தல்: எதிர்பார்த்த முடிவுகள் தானா?

    28/10/2024 Duration: 10min

    குயின்ஸ்லாந்து மாநில தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியிடப் படாவிட்டாலும், Premier Steven Miles தனது கட்சியின் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.

  • NSW அரசு சட்டவிரோதமாக கட்டணங்கள் அறவிட்டுள்ள பலரில் நீங்களும் ஒருவரா?

    28/10/2024 Duration: 06min

    New South Wales மாநிலத்தில் அரச சேவைகளுக்காக, மக்கள் பணம் செலுத்தும் போது, தேவைக்கதிகமாக கட்டணம் செலுத்தியுள்ளார்கள் என்று அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • Firecrackers, Sweets, and Parai drums: Celebrating Deepavali the Australian way - பட்டாசு, பலகாரம், பறை......ஆஸ்திரேலிய தீபாவளி அனுபவங்கள்!

    28/10/2024 Duration: 13min

    The Kannada, Tamil, Malayalam, and Telugu-speaking communities of South Indian heritage in Australia share their beliefs about Deepavali and the unique ways they celebrate the festival. Participants: Smitha Balu, Suresh Hebbal Shivashankarappa, Pramila Shanmuga Ganesan and Laxmi Jyothsna. Produced by Janani Karthick & RaySel. - ஆஸ்திரேலியாவில் வாழும் தென்னிந்தியாவை பின்னணியாக கொண்ட கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழி பேசும் சமூகங்களை சார்ந்தவர்கள் தீபாவளி குறித்து கொண்டிருக்கும் நம்பிக்கைகளையும், அவர்களின் கொண்டாட்ட முறைகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்: ஸ்மிதா பாலு, சுரேஷ் சிவசங்கரப்பா, பிரமிளா கணேஷ், லட்சுமி ஜியோத்சனா. நிகழ்ச்சி தயாரிப்பு: ஜனனி கார்த்திக் & றைசெல்.

  • இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

    28/10/2024 Duration: 09min

    ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களை உலுக்கிய டானா புயல், வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை, பிரமாண்டமாக நடைபெற்ற நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • Telstra மற்றும் Optus இன்று தங்களின் 3G வலையமைப்பை மூடுகின்றன!

    27/10/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 28/10/2024) செய்தி. வாசித்தவர்: செல்வி.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    25/10/2024 Duration: 05min

    இந்த வார முக்கிய செய்திகள்: 26 அக்டோபர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: செல்வி

  • உங்களது வருமானவரியைத் தாக்கல் செய்துவிட்டீர்களா? காலக்கெடு நெருங்குகிறது!

    25/10/2024 Duration: 02min

    ஆஸ்திரேலியர்கள் 2023-24 நிதியாண்டுக்கான tax return வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கிவிட்டது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • How to build your own house in Australia - ஆஸ்திரேலியாவில் உங்கள் சொந்த வீட்டைக் கட்டும்போது கவனிக்க வேண்டியவை

    25/10/2024 Duration: 10min

    Building a house in Australia is a dream for many, but what are the essential steps to achieving it? While buying an existing home may seem straightforward, the process of purchasing land and constructing your own house requires careful planning and consideration. Here's how you can navigate building your own home in Australia. - ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டைக் கட்டுவது என்பது பலரின் கனவாக இருக்கும், ஆனால் அதை அடைவதற்கான அத்தியாவசிய படிகள் என்னவென்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆஸ்திரேலியாவில் உங்கள் சொந்த வீட்டைக் கட்டும்போது கவனிக்கவேண்டியவை தொடர்பில் Afnan Malik ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மலையக மக்களின் விடிவெள்ளியாய் களம் கண்டவர்

    25/10/2024 Duration: 03min

    இலங்கை மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மறைந்த 25 ஆவது நினவு தினம் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இவ்வேளையில் தொண்டமான் குறித்த “காலத்துளி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

  • இலங்கையில் இந்த வாரத்தில் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

    25/10/2024 Duration: 09min

    வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்; வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்க மக்கள் கோரிக்கை; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கையை வெளியிட்ட உதய கம்பன்பில, பல்வேறு தரப்பினரும் இது தொடர்பில் கருத்து. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • “பண வீக்கம் மிதமான நிலைக்கு வந்துள்ளது" - நிதி அமைச்சர்

    25/10/2024 Duration: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 25/10/2024) செய்தி.

  • ஆஸ்திரேலியாவில் வீதிச்சாவடிக் கட்டணங்கள் தொடர்ந்தும் அதிகரிக்கும்!

    24/10/2024 Duration: 06min

    சிட்னி, மெல்பன் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் உள்ள Transurbanனின் வீதிச்சாவடிக் கட்டணங்கள் மேலும் உயரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Australians are paying more than $3 billion per year to use toll roads in the three major capitals, and costs are set to keep rising and threatening to change how we use private transport.

  • விக்டோரியர்களுக்கான புதிய பொது விடுமுறை தொடர்பில் மாநில அரசுடன் பேச்சு!

    24/10/2024 Duration: 02min

    விக்டோரியர்களுக்கான புதிய பொது விடுமுறை ஒன்று தொடர்பில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பூர்வீகக் குடிமக்களுடனான Treaty-உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட உள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மெல்பர்ன் பெருநகரின் வீடு பற்றாக் குறைக்கு இது தீர்வாகுமா?

    24/10/2024 Duration: 10min

    ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் நிலவும் வீடு பற்றாக்குறைக்கு அந்தந்த மாநில அரசுகள் புதிய புதிய கொள்கைகளை அறிவித்துவரும் பின்னணியில், விக்டோரியா மாநில பிரீமியர் Jacinta Allan அவர்கள் இரு கொள்கைகளை அதிரடியாக அறிவித்துள்ளார். அந்த கொள்கைகள் குறித்த விளக்கமும், அலசலும், இன்றைய செய்தியின் பின்னணி நிகழ்ச்சியாக ஒலிக்கிறது. இந்த திட்டம் குறித்து அலசவுள்ளார் பொறியியல் துறையில் விருதுகள் வென்ற Swinburne பல்கலைக் கழக பேராசிரியர் சண்குமார் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த மொழியியல் அறிஞர்

    24/10/2024 Duration: 07min

    அ. கி. ராமானுஜன் அவர்கள் ஒரு இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளையும் ஆராய்ந்து நூல்களை எழுதியவர். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழை நிலைப்படுத்துவதற்கு முயற்சி செய்தவர். சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பெருமைக்குரியவர். தமிழுக்கு அருந்தொண்டாற்றிய அ. கி. ராமானுஜன் குறித்து தமிழ்த்தடம் நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் தனபாலசிங்கம் அவர்கள்.

  • பேய் உலா வரும் நேரம் வருகிறது

    24/10/2024 Duration: 11min

    அறிவியல் பேசும் நாம் பேய் என்ற பித்தலாட்டக் கதைகளுடன் ஏன் வந்தோம் என யோசிக்கிறீர்களா?

  • புகலிடகோரிக்கையாளர்களின் பேரணிக்கு எதிராக இனவெறியுடன் நடந்தவர்கள்மீது நடவடிக்கை – விக்டோரிய பிரீமியர்

    23/10/2024 Duration: 04min

    செய்திகள்: 24 அக்டோபர் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

page 5 from 25