Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 33:13:34
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    07/03/2025 Duration: 08min

    இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவந்துள்ளது; வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பை சுட்டிக்காட்டி நடவடிக்கை கூறிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Alfred சூறாவளி இன்றும் நாளையும் ஏற்படுத்தவுள்ள தாக்கம் என்ன?

    07/03/2025 Duration: 06min

    1974-ஆம் ஆண்டுற்கு பிறகு நாட்டின் தென்கிழக்கு கடற்கரை பகுதிகளை தாக்கும் முதல் சூறாவளியான Alfred சூறாவளி நாளை சனிக்கிழமை அதிகாலை Noosa மற்றும் Coolangatta இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. Alfred சூறாவளியின் வேகம் தற்போது சற்று குறைந்துள்ள போதிலும், அதன் தாக்கம் உயிருக்கு ஆபத்தானதாகவே இருக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்த பிந்தைய செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • வாகனம் மோதி பெண் மரணம் - இலங்கையர் கைது!

    07/03/2025 Duration: 02min

    விக்டோரியா மாநிலத்தில் Wonthaggi புறநகரில் நடைபாதையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த ஒரு பெண்மணி மற்றும் அவர் கூட்டிவந்த நாய் மீதும் கார் ஒன்று மோதியதில் மரணம் அடைந்துள்ளனர். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • ஆல்ஃபிரட் சூறாவளி: மின்சாரம் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர்; உதவிக்கு அழைப்புகள்

    06/03/2025 Duration: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 07 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை.

  • Alfred சூறாவளி: “சந்திக்கத் தயார், ஆனால் இதுவும் கடந்து போகும்”

    06/03/2025 Duration: 12min

    Brisbane மற்றும் Sunshine Coast இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் Alfred சூறாவளி, கனமழை மற்றும் மணிக்கு சுமார் 130 கிலோமீட்டர் வேகத்தில் அழிவுகரமான பலத்த காற்றையும் கொண்டுவரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Alfred சூறாவளி வருவதற்கு முன்னர் தம்மை எப்படித் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று, எமது நேயர்களில் இருவர் – பிரிஸ்பன் நகரில் வசிப்பவரும், அங்கு ஒலிக்கும் Radio 4EBயின் தமிழ் ஒலியின் மூத்த ஒலிபரப்பாளருமான சிவா கைலாசம் மற்றும் Gold Coast நகரில் வசிப்பவரான ஞானவேல் செல்வம் ஆகியோர் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்கள்.

  • ஆஸ்திரேலியாவின் எரிசக்தி விலை, அணுசக்தி, குடியேற்றவாசிகளை உள்வாங்கல்: அமைச்சர் Chris Bowen பதில்

    06/03/2025 Duration: 07min

    நாட்டில் உயர்ந்துள்ள எரிசக்தி விலை உயர்வு, renewable energy திட்டங்களுக்கு சமூக எதிர்ப்பு, அணுசக்தி தொடர்பான அரசின் நிலைப்பாடு போன்ற கேள்விகளுக்கு ஆஸ்திரேலியாவின் Minister for Energy and Climate Change (எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்) Chris Bowen அவர்கள் பதிலளிக்கிறார். அவரோடு உரையாடியவர் றைசெல். இந்த நேர்முகம் ஆங்கிலத்தில் அமைகிறது.

  • லிபரல் ஆட்சியில் Work From Home முறை முடிவுக்கு வரும் – Dutton; என்ன நன்மை? பாதிப்பு?

    06/03/2025 Duration: 07min

    எதிர்கட்சியான Coalition நடைபெறவிருக்கும் பெடரல் தேர்தலில் வெற்றி பெற்றால், Public Servants எனப்படும் அரசு ஊழியர்கள் Work From Home எனப்படும் வீட்டிலிருந்து வேலை செய்யும் பணி முறையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று எதிர்கட்சித் தலைவர் பீட்டர் Dutton அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணி. முன்வைப்பவர்: றைசெல்.

  • Your Hearing: Essential insights and solutions - உங்கள் கேட்கும் திறன்: சில உபயோகமான தகவல்கள்

    06/03/2025 Duration: 12min

    World Hearing Day is observed on 3 March. Audiologist Mustafa, with 14 years of global experience, shares valuable insights and solutions for hearing-related issues. He is the co-founder of Audience Hearing, based in Sydney, Australia. Produced by RaySel. - காது நலம் குறித்த உலக விழிப்புணர்வு தினம் (World Hearing Day) மார்ச் 3 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. காது தொடர்பான பல தகவல்களையும், காது பிரச்சனைகளுக்கான சில தீர்வுகளையும் முன்வைக்கிறார் ஆடியோலஜிஸ்ட் முஸ்தபா அவர்கள். 14 ஆண்டுகால உலகளாவிய நிபுணத்துவமும், அனுபவமும் கொண்ட அவர், சிட்னியில் இயங்கும் Audience Hearing in Australiaவின் இணை நிறுவனர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • இந்த வார தமிழ்நாட்டின் முக்கிய செய்திகள்

    06/03/2025 Duration: 08min

    இந்தியாவில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் அதிர்வலைகள், மீனவர் போராட்டம், மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமையும் வாய்ப்பு உள்ளிட்ட பல செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • சுறா தாக்குதலிலிருந்து காக்க இந்தியாவிலிருந்து குடியேறியவர் எவ்வாறு உதவுகிறார்?

    06/03/2025 Duration: 07min

    இந்த ஆண்டு இதுவரை, ஆஸ்திரேலிய கடல் பகுதிகளில் மூன்று கொடிய சுறா தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த ஒருவரால் வடிவமைக்கப்பட்ட இலவச சுறா எச்சரிக்கை செயலி ஒன்று மக்களை சுறா தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Allan Lee மற்றும் SBS Small Business Secret, SBS Gujarati-உடன் இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • புற்றுநோயைக் குணமாக்கும் தோட்டம்

    06/03/2025 Duration: 11min

    எழுபது வயதான K M வரதராஜும் அவர் துணைவியார் ஜெயா அவர்களும் புற்றுநோய்க்குத் தீர்வாக, நோயாளிகளின் வாழ்நாளை நீடிக்கச் செய்யும் தாவரங்களை ஒரு பண்ணையில் வளர்த்து வருகிறார்கள். இதுவரை, சுமார் ஆயிரம் பேர் இதனால் பயனடைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். இது குறித்து குலசேகரம் சஞ்சயன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார். முள் சீத்தாப்பழம் அல்லது அன்னமுன்னா பழத்தின் சாத்தியமான பயன்பாடு குறித்த தனது மருத்துவ நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் கன்பராவைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் வைத்தியர் பிரணவன் கணேசலிங்கம். 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புயல் இன்று கரையைக் கடக்கிறது!

    06/03/2025 Duration: 05min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 6 மார்ச் 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • சுமார் 20 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் மறைந்தார்

    05/03/2025 Duration: 02min

    தனது இரத்த தானத்தால் சுமார் 2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றிய பெருமை மிக்க ஆஸ்திரேலியர் James Harrison OAM தனது 88-வது வயதில் காலமானார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • My journey: Past reflections and future horizons – Dr.V.Irai Anbu IAS - Part 2 - நான் கடந்துவந்த பாதையும், தொடரும் பயணமும் - இறையன்பு IAS - பாகம் 2

    05/03/2025 Duration: 13min

    Dr. Irai Aanbu IAS, a retired Chief Secretary to the Government of Tamil Nadu, is a distinguished writer known for his integrity in administration and commitment to social service. He has made a profound impact on Tamil literature, with his books on history, philosophy, governance, and social issues receiving widespread acclaim. His insightful writings delve deeply into people's lives, offering fresh perspectives on social welfare. In an engaging conversation, Dr. V.Irai Anbu—a remarkable figure who seamlessly blends administration and literature—was interviewed at the SBS Sydney studio by RaySel. Part - 2. - முனைவர் இறையன்பு IAS அவர்கள் தமிழ் நாடு அரசின் தலைமைச் செயலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். நேர்மையான நிர்வாகத்திற்கும் சமூக சேவைக்கும் பெயர் பெற்றவர். தமிழ் இலக்கியத்திற்கு அளவிட முடியாத பங்களிப்பு செய்துள்ளார். வரலாறு, தத்துவம், நிர்வாகம், சமூக சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அவர் எழுதிய நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மக்கள் வாழ்வியலை ஆழமாக அணுகும் அவரது எழுத்துக

  • My journey: Past reflections and future horizons – Dr.V.Irai Anbu IAS - நான் கடந்துவந்த பாதையும், தொடரும் பயணமும் - இறையன்பு IAS

    05/03/2025 Duration: 13min

    Dr. Irai Aanbu IAS, a retired Chief Secretary to the Government of Tamil Nadu, is a distinguished writer known for his integrity in administration and commitment to social service. He has made a profound impact on Tamil literature, with his books on history, philosophy, governance, and social issues receiving widespread acclaim. His insightful writings delve deeply into people's lives, offering fresh perspectives on social welfare. In an engaging conversation, Dr. V.Irai Anbu—a remarkable figure who seamlessly blends administration and literature—was interviewed at the SBS Sydney studio by RaySel. Part 1. - முனைவர் இறையன்பு IAS அவர்கள் தமிழ் நாடு அரசின் தலைமைச் செயலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். நேர்மையான நிர்வாகத்திற்கும் சமூக சேவைக்கும் பெயர் பெற்றவர். தமிழ் இலக்கியத்திற்கு அளவிட முடியாத பங்களிப்பு செய்துள்ளார். வரலாறு, தத்துவம், நிர்வாகம், சமூக சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அவர் எழுதிய நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மக்கள் வாழ்வியலை ஆழமாக அணுகும் அவரது எழுத்துகள்

  • வெற்றி பெற்றால் NSW அரசு பாடசாலைகளுக்கு கூடுதல் நிதி வழங்குவோம் - லேபர்!

    05/03/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 05/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • Want to help shape Australia’s future? Here’s how to enrol to vote - ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவ விரும்புகிறீர்களா? தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்வது எப்படி?

    04/03/2025 Duration: 07min

    With another federal election due this year, there are steps you will need to take before casting your vote for the first time. Plenty of resources are available to help you enrol to vote and have your say in shaping our nation. - மற்றொரு ஃபெடரல் நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருப்பதால், முதல் முறையாக வாக்களிப்பதற்கு முன்னர் நீங்கள் சில விடயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் உங்களைச் சேர்த்துக் கொள்ளவும், நமது தேசத்தை வடிவமைப்பதில் உங்கள் கருத்தைச் சொல்லவும் பல வளங்கள் உள்ளன.

  • சூறாவளி Alfred-ஐ கண்டு மக்கள் ஏன் அஞ்சுகிறார்கள்?

    04/03/2025 Duration: 05min

    Alfred சூறாவளி Brisbane மற்றும் Sunshine Coast இடையே வியாழக்கிழமை பிற்பகுதியில் அல்லது வெள்ளிக்கிழமை அதிகாலையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Alfred சூறாவளி கரையை கடக்கும்போது கனமழை மற்றும் மணிக்கு சுமார் 130 கி.மீ வேகத்தில் அழிவுகரமான பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • முதலாவது வீடு வாங்குபவர்களை ஏன் விக்டோரியா மாநிலம் கவர்கிறது?

    04/03/2025 Duration: 02min

    கடந்த மாதம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைந்துள்ள நிலையில் நாட்டில் சில பகுதிகளில் வீட்டு விலைகள் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மெல்பனில் மிகக் குறைந்த அளவில் வீடுகளின் விலை அதிகரித்ததாக CoreLogic-இன் தரவு கூறுகிறது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • NSW-இல் 9,000 குதிரைகள் கொல்லப்பட்டதையடுத்து தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது

    04/03/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 04/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

page 6 from 14