Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
ஆஸ்திரேலிய தெருக்களில் மோதல்கள்: குடியேற்றம் குறித்த பேரணிகள் நாட்டைப் பிளவுபடுத்துகின்றன
01/09/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 01/09/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
31/08/2025 Duration: 10minஇந்திய பிரதமர் நரேந்திர மோடி சீன பயணம் - சீன அதிபர் ஜின்பிங்குடன் சந்திப்பு : இரு நாட்டு உறவில் மாற்றம் நிகழுமா? “மரங்களோடு பேசுவோம்” மாநாடு - சீமானின் அதிரடி பேச்சு; ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை! மோதல் முடிவுக்கு வந்ததா?; தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக மோதல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
30/08/2025 Duration: 06minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (24 – 30 ஆகஸ்ட் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 30 ஆகஸ்ட் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
நியூசிலாந்தில் குடியேறுவதற்கான புதிய விசா அறிமுகம்!
29/08/2025 Duration: 02minநியூசிலாந்தில் குடியேறுவதற்கான புதிய விசா ஒன்றை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
'காலத்துக்கேற்ப என்னை மாத்திட்டேன்': Super Singer பாடகர் அஜய் கிருஷ்ணா
29/08/2025 Duration: 15minஇசையமைப்பாளர் 'தேனிசைத்தென்றல்' தேவா அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு இசைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள பாடகர் அஜய் கிருஷ்ணா எமக்கு வழங்கிய நேர்காணல். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன். Music Director 'Thenisai Thendral' Deva will be visiting Australia on a musical tour. As part of the events, singer Ajay Krishna, who will be performing, having a conversation with Praba Maheswaran.
-
Penalty Rates, Overtime ratesஐ பாதுகாக்கும் சட்டம் நிறைவேறியது
29/08/2025 Duration: 06minஆஸ்திரேலிய அரசு இந்த வாரம் Penalty Rates Billஐ சட்டமாக நிறைவேற்றியுள்ளது. இது ஊழியர்களின் penalty rates, overtime rates போன்ற உரிமைகளை சட்ட ரீதியாக பாதுகாக்கும் ஒரு முயற்சி எனக் கூறப்படுகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
‘நாட்டின் பெரும்பகுதி வெப்பமான, ஈரமான, காட்டுத்தீ அபாயம் கொண்ட வசந்த காலம்’ – வானிலை ஆய்வு மையம்
29/08/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 29/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இரண்டு போலீசாரை சுட்டுக் கொன்ற Freeman சார்ந்த “இறையாண்மை குடிமக்கள்” என்பவர்களின் கொள்கைகள் என்ன?
28/08/2025 Duration: 09minவிக்டோரியா மாநிலத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்படும் Dezi Freeman எனபவர் Sovereign Citizens - ‘இறையாண்மையுடைய குடிமக்கள்’ எனும் கொள்கையை கடைபிடிப்பவர் என்றும், இது தீவிர விளிம்பு நிலை குழு என்றும் கருதப்படுகிறது. இந்த பின்னணியில் Sovereign Citizens பற்றி விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
28/08/2025 Duration: 08minஇலங்கையில் அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டார்; மீண்டும் ஆரம்பமான யாழ்.செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணியில் தொடர்ந்து மனித எச்சங்கள் மீட்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
28/08/2025 Duration: 07minகாசாவுக்குள் முன்னேறும் இஸ்ரேலிய படைகள்; லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; கேமரூன் எல்லையில் ஆயுததாரிகள் மீது நைஜீரியா தாக்குதல்; சீனா இயற்கை வளங்களை எடுப்பதாக ஜப்பான் குற்றச்சாட்டு; பிரிட்டனில் புகலிடக்கோரிக்கையாளர்களை விடுதிகளில் வைக்கப்படுவதற்காக எதிராக போராட்டம்; மியான்மர் அகதிகளுக்கு சட்டப்பூர்வமாக வேலை செய்வதற்கு அனுமதி வழங்கிய தாய்லாந்து; இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி நடைமுறை; காங்கோ- எம்23 இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
‘வடிவம் மாறலாம், வாசிப்பு பழக்கம் மாறாது’ – கார்டூனிஸ்ட் மதன்
28/08/2025 Duration: 10minமதன் அவர்கள் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான கார்டூனிஸ்ட். நகைச்சுவை சித்திரம், வரலாறு, தகவல், எழுத்து, திரைப்பட ஆய்வு என்று தொட்ட துறையிலெல்லாம் தனி முத்திரை பதித்தவர் அவர். மதன் அவர்கள் 15 ஆண்டுகளுக்கும் முன்பு (2010 ஆம் ஆண்டு) நமக்கு வழங்கிய நீண்ட நேர்முகத்தின் மறு பதிவு இது. பாகம் 2.
-
ஆஸ்திரேலிய வானில் தோன்றவுள்ள ‘இரத்த நிலா’!
28/08/2025 Duration: 02minஆஸ்திரேலிய வானில் முழு சந்திர கிரகணம் ''blood moon’ பிரமாண்டமாக காட்சியளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நான் எப்படி கார்டூனிஸ்ட் ஆனேன்?
28/08/2025 Duration: 11minமதன் அவர்கள் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான கார்டூனிஸ்ட். நகைச்சுவை சித்திரம், வரலாறு, தகவல், எழுத்து, திரைப்பட ஆய்வு என்று தொட்ட துறையிலெல்லாம் தனி முத்திரை பதித்தவர் அவர். மதன் அவர்கள் 15 ஆண்டுகளுக்கும் முன்பு (2010 ஆம் ஆண்டு) நமக்கு வழங்கிய நீண்ட நேர்முகத்தின் மறு பதிவு இது. பாகம் 1.
-
ஒரு குடும்பம் ஒரு ஆண்டில் வீணடிக்கும் உணவின் மதிப்பு $1,500. நீங்கள் அதில் ஒருவரா?
28/08/2025 Duration: 08minஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு குடும்பம் $1,500 மதிப்புள்ள உணவை வீணாக்குறார்கள் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏற்படுத்தும் வலி தீருமா?
28/08/2025 Duration: 15minஉலகின் பல்வேறு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட கவலைகளைத் தொடர்ந்து, அனைத்து மக்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை 2010ஆம் ஆண்டு ஐ. நா. சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கடுத்த ஆண்டு, 2011 ஆம் ஆண்டு தொடக்கம் ஆகஸ்ட் 30 ஆம் தேதியை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது. இது குறித்து, ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். 2024ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.
-
நாட்டில் குற்ற செயல்கள் அதிகரிப்பதாக பெரும்பாலான மக்கள் கவலை
28/08/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 28/08/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
-
One of the biggest drivers of anti-gay slurs isn't actually homophobia - நாம் ஏன் இன்னும் ஓரினச்சேர்க்கையாளர்களை அவதூறாகப் பேசுகிறோம்?
27/08/2025 Duration: 08minFrom violent attacks targeting gay men to slurs on the sports field, homophobia has been making headlines. - ஓரினச்சேர்க்கையாளர்களைக் குறிவைக்கும் வன்முறைத் தாக்குதல்கள் முதல் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் அவதூறு நடவடிக்கைகள் வரை, ஓரினச்சேர்க்கை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகிறது.
-
3500 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக Australia Post அறிவிப்பு!
27/08/2025 Duration: 02min3,500-க்கும் மேற்பட்ட seasonal workers எனப்படுகின்ற குறிப்பிட்ட காலப்பகுதிக்கான ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக Australia Post அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவின் குடும்பச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் எவை?
27/08/2025 Duration: 13minFamily Law Act 1975- ஆஸ்திரேலியாவின் குடும்பச் சட்டத்தில் சில முக்கிய திருத்தங்கள் கடந்த ஜுன் முதல் கொண்டுவரப்பட்டுள்ளன. இதுதொடர்பில் விரிவாக விளக்குகிறார் மெல்பனில் சட்டத்தரணியாக கடமையாற்றுபவரும் Shan Lawyers நிறுவனத்தின் இயக்குனருமான திருமலை செல்வி சண்முகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
யூத விரோதத் தாக்குதல்களின் பின்னணியில் ஈரான், தூதர் நாடுகடத்தல்
27/08/2025 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 27/08/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.