Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
Vaping: prevalence, risks, and helping your teenager quit - வேப்பிங் (vaping) ஏன் ஆபத்தானது? அதற்கு அடிமையானவர்களுக்கு எப்படி உதவுவது!
19/07/2024 Duration: 09minMajor regulatory changes in 2024 have brought about restricted access to vaping products in Australia. The crackdown on what is dubbed a “major public health issue” could lead to an increased number of teens seeking support to overcome the nicotine addiction, experts think. Learn about the health risks and ways to help young people in their quitting journey. - நம் நாட்டில், நெருப்பின்றி புகை பிடிக்கும் வேப்பிங் (vaping) பொருட்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வேப்பிங் ஒரு “முக்கிய சுகாதார பிரச்சினை” என்று விவரிக்கப்பட்டுள்ளது, அத்துடன் பதின்ம வயதினரிடையே வேப்பிங் செய்யும் பழக்கம் பெருகி வருவது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வேப்பிங் செய்வதை நிறுத்துவது இளைஞர்களுக்குச் சவாலாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவை அறிவோம் நிகழ்ச்சித் தொடரின் இந்த நிகழ்ச்சியில், வேப்பிங் பழக்கத்திலிருந்து விலக விரும்புபவர்களுக்கு எப்படியான ஆதரவு வழங்க முடியும் என்பதை நாங்கள் ஆராய்வோம். Zoe Thomaidou தயாரித்த விவரணத்தை தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
NATO is 75. Has it achieved its objectives? - NATO, வயது 75. அதன் நோக்கங்களை அடைந்துவிட்டதா?
19/07/2024 Duration: 17minNATO is 75 years old but still standing strong. An interview with journalist and political observer Ainkaran Vigneswara to detail what NATO has achieved in the past 75 years and its contribution to world peace (or not). Kulasegaram Sanchayan’s interview with Ainkaran also explores a detailed discussion on the possibility of India joining NATO. - NATO என்ற அமைப்பு 75 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. இன்றும் வலுவாக உள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் NATO சாதித்தவை என்ன, உலக அமைதிக்கு (அதன் பங்களிப்பு என்ன, இந்த அமைப்பில் இந்தியா இணைவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்ற பல விடயங்கள் குறித்து பத்திரிகையாளரும் அரசியல் அவதானியுமான ஐங்கரன் விக்னேஸ்வராவுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
19/07/2024 Duration: 08minஅதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மலையக அரசியல் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 52 மனித எலுப்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன நிலையில் புதைகுழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
நவுரு தீவில் குடிவரவு தடுப்புக்காவலில் தற்போது 96 பேர்; 22% கடுமையான மனநல பிரச்சனைகளுடன்
19/07/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/07/2024) செய்தி.
-
பாடசாலையிலுருந்து பைக்கில் வீடு திரும்பிய 11 வயது இந்திய மாணவன் பேருந்து மோதி பலி!
19/07/2024 Duration: 01minகுயின்ஸ்லாந்து மாநிலம் Sunshine Coast-இல் இரு சக்கர பைக்-இல் பாடசாலை விட்டு வீடு திரும்பிய 11 வயது பாடசாலை மாணவன் ஒருவன் 6 மாணவர்களை ஏற்றி வந்த பாடசாலை பேருந்து மோதி மரணம் அடைந்துள்ளார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
Moonlanding and the Dish at Parks, NSW - சந்திரனில் மனிதன் முதன் முதல் காலடி வைத்த போது......
19/07/2024 Duration: 03minKalaththulli is a compilation of Historic incidents, memorable events, Australian past, Tamil history and heritage and more. In this episode, our producer - பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.
-
Paris 2024: ஒலிம்பிக்தீபம் ஏந்திய தமிழன் - புதுமைகளும் முன்னேற்பாடுகளும்
18/07/2024 Duration: 11minஅடுத்தவாரம் பாரிஸ் நகரில் ஆரம்பமாகவுள்ள 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள், புதுமைகள் மற்றும் பல தகவல்களை பாரிஸ் நகரிலிருந்து விவரிக்கிறார் ஊடகவியலாளர் வாசுகி குமாரதாசன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
மின்சார பயன்பாட்டை அளக்க Smart Meter: கட்டணம் அதிகரிக்குமா?
18/07/2024 Duration: 09minமின்சார கட்டணம் அதிகரித்து செல்கிறது. இந்த நிலையில் வீடுகளில் பொருத்தப்பட்டு வரும் ‘smart meters’ என்ற மீட்டர்கள் காரணமாகவே மின்கட்டணங்கள் அதிகரிப்பதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மைதானா? ஏன் smart meter பொருத்த மின் வழங்குநர் கட்டாயப்படுத்துகின்றனர்? இதற்கு யார் செலவழிப்பது? என்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
Millaa Millaa Falls நீச்சல் பகுதில் இந்திய மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!
18/07/2024 Duration: 02minவடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள பிரபலமான நீர்வீழ்ச்சி Millaa Millaa Falls-இல் உள்ள நீச்சல் இடத்தில நீந்த சென்ற இரண்டு இந்திய மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
மதம்: மணியனின் பார்வை
18/07/2024 Duration: 10minதமிழகம் நன்கறிந்த ஆளுமையான தமிழருவி மணியன் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு “மதம்” எனும் தலைப்பில் வழங்கிய ஒலிக்கட்டுரை. தயாரிப்பு: றைசெல்.
-
பல லட்சம் மக்களுக்கு கட்டணத்தை திரும்பத் தரும் நான்கு பெரிய வங்கிகள்!
18/07/2024 Duration: 07minநாட்டில் இயங்கும் நான்கு மிகப் பெரிய வங்கிகளும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் தவிர்த்திருக்கக்கூடிய கட்டணங்களை வசூலித்துள்ளன. சிக்கலான செயல்முறைகளை வங்கிகள் நடைமுறைப்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் நிதி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று Australian Securities and Investment Commission அறிக்கை கண்டறிந்துள்ளது. இந்த நான்கு வங்கிகளும் அப்படி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை திருப்பிச் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Phoebe Deas & Ciara Hain. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
-
The yearning never stops - புத்தம் புது "பூமி"?!
18/07/2024 Duration: 11minScientists using NASA's planet-hunting Kepler telescope have found a planet beyond the solar system that is a close match to Earth. Last week. New Horizon sent detailed images from Pluto. - மனிதன் பூமியிலிருந்து சென்று குடியேறலாம் அல்லது மனிதர் போன்ற உயிரினங்கள் அங்கு வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் புதிய கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இது பூமியிலிருந்து 1,400 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதற்கு Kepler 452b என்று பெயரிட்டுள்ளனர்.
-
நாட்டின் உபரி நிதி எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் – Treasurer
18/07/2024 Duration: 04minசெய்திகள்: 18 ஜூலை 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்
-
ஏமாற்ற வருகிறார்கள்; எப்படி நாம் ஏமாறாமல் இருப்பது?
17/07/2024 Duration: 10minஒருமுறை ஒருவர் ஏமாந்துவிட்டார் என்றால் அவரை குறிவைத்து இழந்த பணத்தை மீட்டுத் தருகிறோம் என்று மீண்டும் அவரை ஏமாற்றும் financial recovery scam நாட்டில் அதிகரித்து வருகிறது. எப்படி நாம் ஏமாறாமல் இருப்பது என்று விளக்குகிறார் - Cyber Risk Senior Manager, Master of Cybersecurity and Forensics எனும் தகுதிகள் கொண்டவர் C. செந்தில் அவர்கள். அவர் University of Sunshine Coastயில் இணைய பாதுகாப்பு குறித்த கல்வியாளர் ஆவார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
Planning medical treatment abroad? Key considerations to keep in mind - சிகிச்சைக்காக வெளிநாடு செல்கின்றீர்களா? எதில் கவனம் தேவை?
17/07/2024 Duration: 12minThe number of Australians traveling overseas for medical treatment is increasing annually. R. Sathyanathan, a seasoned professional in the media industry, elaborates on the types of treatments sought abroad and the potential issues that may arise from this trend. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடுகளில் சிகிச்சைபெற செல்கின்றவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. என்னென்ன சிகிச்சைகளுக்காக மக்கள் இங்கிருந்து வெளிநாடு செல்கின்றனர், அதில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன என்று விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
'கச்சத்தீவு தேவை இல்லை, தீர்வு தான் வேண்டும்'
17/07/2024 Duration: 12minகச்சதீவு தொடர்பாக தமிழக மீனவர்களின் கோரிக்கை பற்றியும், மீனவர்கள் எதிர்கொண்டுள்ள எல்லைச் சிக்கல் பற்றியும் தமிழ்நாட்டில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜேசுராஜ் அவர்களுடன் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன் நடத்தும் உரையாடல்.
-
பாடகி மதுஸ்ரீ: மிகச் சாதுவான “சண்டைக் கோழி” இவர்
17/07/2024 Duration: 10minமெல்பன் மற்றும் சிட்னி நகரங்களில் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் “அப்படிப் போடு" என்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா வரவிருக்கும் திரைப்பட மற்றும் சங்கீத பாடகர் மதுஸ்ரீ அவர்களின் தாய் மொழி வங்காள மொழி. இருந்தாலும் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மற்றும் தமிழ் போன்ற இந்திய மொழித் திரைப்படங்கள் பலவற்றில் பாடியுள்ளார்.
-
ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளது, வெளிநாட்டுப் பயணங்களில் என்ன தாக்கம்?
17/07/2024 Duration: 07minகடந்த ஆறு மாதங்களில் ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளது இதனால், தங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை செலவழிக்க வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
-
மாணவர் விசாவில் உள்ள கட்டுப்பாடுகள் புகலிட விண்ணப்பங்களை அதிகரிக்குமா?
17/07/2024 Duration: 02minமாணவர் வீசாவில் வருபவர்கள் பாதுகாப்பு வேண்டி விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை ஆறு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
விக்டோரியாவில் வெள்ளம் தொடர்பிலான எச்சரிக்கைகள்
16/07/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை17/07/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.