Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
மனநல சேவைகளுக்கு ஒரு பில்லியன் டொலர்கள் ஒதுக்குவதாக அரசு உறுதியளித்தது
08/04/2025 Duration: 05minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 08 ஏப்ரல் 2025 செவ்வாய்க்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் முறை அறிவோம்: House of Representatives
07/04/2025 Duration: 10minஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமான House of Representatives எனப்படும் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்தல் நடைபெறும் பின்னணியில் மக்கள் பிரதிநிதிகள் சபை குறித்த விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
'என்னை நாடு கடத்த வேண்டாம்' - ஈழத்தமிழ் அகதி பாஸ்கரன் குமாரசாமி
07/04/2025 Duration: 15minஇந்தியாவிற்குப் புகலிடம் தேடி 2004 ஆம் ஆண்டு சென்ற இலங்கைத் தமிழ் அகதியான பாஸ்கரன் குமாரசாமி, கடந்த 21 ஆண்டுகள் இந்திய மண்ணில் கழித்துள்ளார். தொடர்ச்சியான முரண்பாடான நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் நடவடிக்கைகள் காரணமாக அவரது அகதி நிலை நிச்சயமற்றதாகவே உள்ளது. அவர் நாடு கடத்தப்படும் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், அவரது எதிர்காலம் ஊசலாட்டத்தில் உள்ளது.
-
சிட்னியில் சித்திரைப் புத்தாண்டு விழா!
07/04/2025 Duration: 13minசிட்னி தமிழ் அமைப்புகள் மற்றும் வர்த்தகர்கள் ஆதரவோடு தாயகம் குழுமம் வழங்கும் “சித்திரைப் புத்தாண்டு விழா” ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை சிட்னியின் Merrylands நகரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து கலந்துரையாடுகின்றனர்: பாலா விக்னேஸ்வரன் (தாயகம் வானொலி) & சிவா சிவராஜ் (தமிழர் ஒருங்கிணைப்புக்குழு). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்குகின்றன !
07/04/2025 Duration: 10minநாடாளுமன்றத் தேர்தல் மே 3ஆம் தேதி நடக்க இருக்கும் பின்னணியில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கடந்த பத்து நாட்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
07/04/2025 Duration: 12minஇந்தியாவில் கடும் எதிர்ப்பு மத்தியில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்; தமிழகத்தில் நூற்றாண்டு பழமையான பாம்பன் பாலத்திற்குப் பதிலாக புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் திறப்பு; 2026 நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி; பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா? - இவை உள்ளிட்ட செய்திகளோடு 'செய்திகளின் பின்னணி' நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
வீட்டிலிருந்து வேலை செய்வது முடிவுக்கு வரும் எனும் கொள்கையை கைவிடுகிறோம் - Peter Dutton
07/04/2025 Duration: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 07 ஏப்ரல் 2025 திங்கட்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்திய பிரதமரின் இலங்கைப் பயணம் – விரிவான தகவல்
06/04/2025 Duration: 06minஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இந்த பயணத்தில் அவர் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதுடன், வளர்ச்சி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். குறிப்பாக, இந்திய உதவியில் அமைக்கப்பட்ட நலத் திட்டங்களை மக்களிடம் கையளித்தார். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
05/04/2025 Duration: 06minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (30 மார்ச் – 05 ஏப்ரல் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 05 ஏப்ரல் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
How to vote in the federal election - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது எப்படி?
04/04/2025 Duration: 09minOn election day the Australian Electoral Commission anticipates one million voters to pass through their voting centres every hour. Voting is compulsory for everyone on the electoral roll, so all Australians should familiarise themselves with the voting process before election day. - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் 4 வாரங்களே உள்ள பின்னணியில், வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாகும். ஆஸ்திரேலிய தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது!
04/04/2025 Duration: 02minஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
04/04/2025 Duration: 08minஇந்திய பிரதமர் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று இலங்கை வருகிறார்; சூடுபிடிக்கும் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார பணிகள்; ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சில அரசியல் தலைவர்கள் கைது; தொடரும் விசாரணைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
MCG மைதானத்திற்குள் துப்பாக்கிகளை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு ஆண்கள் கைது
03/04/2025 Duration: 05minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 04 ஏப்ரல் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தின் உருவாக்கமும் பின்னணியும்
03/04/2025 Duration: 07minஇசைக்கச்சேரிகள் முதல் திருமணங்கள் வரை நாதஸ்வரம் எனும் இசைக்கருவி தமிழர்களின் வாழ்வில் இணைந்திருக்கிறது. அப்படியான நாதஸ்வரம் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் நரசிங்கம்பேட்டையில் உருவாக்கப்பட்டு வருகிறது. புவிசார் குறியீட்டைக் கொண்ட நரசிங்கம்பேட்டை நாதஸ்வர உருவாக்கத்தின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிராபாகரன்.
-
அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதி வரி ஆஸ்திரேலியாவை பாதிக்குமா?
03/04/2025 Duration: 08minஅமெரிக்கா இறக்குமதி செய்யும் பெரும்பாலான பொருட்களுக்கு புதிய வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்துள்ளார். இதில் ஆஸ்திரேலிய பொருட்கள் மீது 10 சதவீத வரி அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலியாவில் எந்த நகரங்களில் அதிகமானோர் குடியேறுகின்றனர்?
03/04/2025 Duration: 02minநாட்டின் முக்கிய நகரங்களில் கடந்த ஜுன் வரையிலான 12 மாதங்களில் கூடுதலாக 4,30,000 பேர் குடியேறியுள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிகரெட் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய மாற்றம்!
03/04/2025 Duration: 02minஒவ்வொரு சிகரெட்டிலும் உடல்நலம் தொடர்பில் கடுமையான எச்சரிக்கை செய்திகள் அச்சிடும் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
உங்களுக்கு எல்லாமாய் இது!
03/04/2025 Duration: 12minமனித இயந்திரத்தைப் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தமிழ் மருத்துவர் டாக்டர் பாலாஜி பிக்சாண்டி, முதியவர்களுக்கும் புனர்வாழ்வு தேடுபவர்களுக்கும் உதவும் வகையில் அவற்றைப் பயன்படுத்த ஒரு சர்வதேச முயற்சியில் இறங்கியுள்ளார். அவரை 2018ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார், அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
-
இறந்தவர்களின் superannuation நிதியை திரும்ப தருவதில் ஏன் தாமதம்? - ASIC கேள்வி
03/04/2025 Duration: 06minSuperannuation துறையில் claim விண்ணப்பங்கள் பரிசீலனையில் நிலவும் கூடுதலான தாமதங்கள் மற்றும் மோசமான வாடிக்கையாளர் சேவை போன்றவை சமீபத்திய ASIC-இன் மதிப்பாய்வு அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் 34 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆங்கிலத்தில் Tys Occhiuzzi எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி
03/04/2025 Duration: 09minஇந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத்திருத்த மசோதா, திருப்பூரில் கல்லூரி மாணவி ஆணவப்படுகொலை, கச்சத்தீவை மீட்க கோரி தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம், மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு உள்ளிட்ட உள்ளிட்ட பல செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.