Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 105:19:16
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • Stem cell (குருத்தணு) தானம் செய்ய ஏன் பலர் முன்வருவதில்லை?

    28/03/2025 Duration: 16min

    சிலரது நோயைக் குணப்படுத்த குருத்தணு என்று அறியப்படும் stem cell சிகிச்சை தேவைப்படலாம். அதற்கு அவருக்கு ஒத்த மரபணு உள்ள ஒருவர் அதனைத் தானம் செய்ய வேண்டும். ஆனால், இலங்கை, இந்திய பின்னணி கொண்டவர்கள், அதிலும் குறிப்பாக தமிழ் பின்னணி கொண்டவர்கள் குருத்தணு தானம் செய்யும் பதிவேட்டில் அதிகளவில் இல்லை என்று தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது குறித்து, ஆஸ்திரேலியாவில் நாற்பது வருடங்களுக்கு மேல் ஒரு இரத்தவியல் நிபுணராகக் கடமையாற்றும் Dr ஆறுமுகம் மனோகரன், AM அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    28/03/2025 Duration: 08min

    கருணா, பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை அமைந்துள்ளார்கள்; வவுனியாவில் இந்தியா - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை இடம்பெற்றது; இலங்கையின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு பிரிட்டன் பயணத்தடை விதித்துள்ளது – இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • தேர்தல் அறிவித்தலின் பின் ஆளுநர் Sam Mostyn நாடாளுமன்றத்தைக் கலைத்தார்

    27/03/2025 Duration: 05min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 28 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3 சனிக்கிழமை!

    27/03/2025 Duration: 02min

    ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • எதிர்கட்சியின் பதில் நிதிநிலை அறிக்கையில் என்ன அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன?

    27/03/2025 Duration: 08min

    நேற்றிரவு பெடரல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் Peter Dutton 2025-26 நிதியாண்டிற்கான பதில் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். வாழ்க்கைச் செலவை சமாளிக்கும் திட்டங்கள், குடிவரவு எண்ணிக்கை குறித்த திட்டம் மற்றும் நலத்துறை மேம்பாடு என பல அம்சங்களை அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3 - அரசு வட்டாரம்!

    27/03/2025 Duration: 02min

    ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவில் 485 TR விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடம்!

    27/03/2025 Duration: 02min

    ஆஸ்திரேலியாவில் 485 Temporary Graduate விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • 'ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்' - சிறுகதை

    27/03/2025 Duration: 16min

    தமிழக எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் அவர்கள் மார்ச் 16ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 64. நாறும்பூநாதன் அவர்கள் 2017ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்த போது, அவரை குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் போது, தனது சிறுகதை ஒன்றை அவரது குரலிலேயே அவர் வாசித்திருந்தார். அதனை ஒரு நிகழ்ச்சியாகத் தயாரித்து வழங்குகிறோம்.

  • 2032 பிரிஸ்பன் புதிய ஒலிம்பிக் அரங்கம் - சர்ச்சையும், தீர்வும்!

    27/03/2025 Duration: 07min

    2032 பிரிஸ்பன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான மைதானங்கள், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவை குறித்த 100 நாள் சுயாதீன மதிப்பாய்வைத் தொடர்ந்து 2032 ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்துவதற்கான திட்டங்களை கடந்த செவ்வாய்க்கிழமை குயின்ஸ்லாந்து மாநில பிரீமியர் David Crisafulli வெளியிட்டார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • வெற்றி பெற்றால் பெட்ரோல் விலையை குறைப்போம் - Peter Dutton

    27/03/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 27/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • இந்த வார தமிழ்நாடு/இந்தியா: முக்கிய செய்திகளின் பின்னணி

    26/03/2025 Duration: 09min

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்; சென்னையில் தொடர் நகை கொள்ளை- என்கவுன்டர் பின்னணி; தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்வு; ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா நகைச்சுவை பேச்சும் சிவசேனா, பாஜக கட்சிகளின் விமர்சனமும், ஜம்மு & காஷ்மீரில் பிரிவினைவாத செயல்பாட்டாளர்களின் வீடுகளில் சோதனை உள்ளிட்ட பல செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • ரமலான் மாதத்தில் வேலை, வீடு மற்றும் நோன்பு எல்லாவற்றையும் இவர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்!

    26/03/2025 Duration: 14min

    ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிப்பது இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று. சூரிய உதயம் முதல் மறையும் வரை உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் வேலை, வீடு, சமையல் மற்றும் வழிபாடு ஆகியவற்றை ரமலான் மாதத்தில் எவ்வாறு கையாள்கிறார்கள் என சிட்னி, பிரிஸ்பன் மற்றும் பெர்த் நகரங்களில் வசிக்கும் சிலரின் அனுபவ கருத்துகளுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • நிதிநிலை அறிக்கையில் ஒருவருக்கான புதிய வரிச்சலுகை அறிவிப்பு!

    26/03/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 26/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • நாட்டில் என்னென்ன விதமான மோசடிகள் நடக்கின்றன?

    26/03/2025 Duration: 18min

    நாட்டில் பல்வேறுவிதமான மோசடிகளில் சிக்கி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. என்னென்ன விதமான மோசடிகள் நடக்கின்றன என்பது தொடர்பில் விளக்குகிறார் விக்டோரிய காவல்துறையைச் சேர்ந்த Acting Sergeant ராஜேஷ் சாம்பமூர்த்தி. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • நிதிநிலை அறிக்கை 2025: என்னென்ன சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன?

    26/03/2025 Duration: 09min

    2025-26 நிதியாண்டிற்கான பெடரல் அரசின் நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டார். இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • "சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவோம்" - One Nation கட்சி

    25/03/2025 Duration: 09min

    Pauline Hanson-இன் One Nation கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுமார் 75,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு குடியேற்றம் நாட்டில் நிலவும் வீடுகள் பற்றாக்குறைக்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து SBS Examines -இற்காக Rachael Knowles, Jarrod Landells மற்றும் Cristina Freitas இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து தருகிறார் செல்வி.

  • இன்றிரவு நிதிநிலை அறிக்கை; முன்னோட்டமாக சில தகவல்கள் வெளிவந்தன!

    24/03/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 25/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • பெர்த் விமான நிலைய ஊழியரைத் தாக்கிய இந்திய நபருக்கான தண்டனை அறிவிப்பு!

    24/03/2025 Duration: 02min

    பெர்த் விமான நிலைய ஊழியர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில், இந்தியர் ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட விமானநிலைய ஊழியருக்கு 7500 டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • எங்கும் எதிலும் செயற்கை நுண்ணறிவு: AIஐ புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது எப்படி?

    24/03/2025 Duration: 16min

    நாம் பயன்படுத்தும் பொருட்களில் நமக்கு தெரியாமலேயே ஒளிந்திருக்கிறது செயற்கை நுண்ணறிவு என்கிறார் AI நிபுணர் சுகன்யா அவர்கள். உலகில் நீக்கமற நிறைந்திருக்கும் AIஐ எப்படி புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது, அதில் நாம் எப்படி எச்சரிக்கையாக இருப்பது என்று விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுகன்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து தேவையான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    24/03/2025 Duration: 09min

    நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டம், தமிழக வெற்றி கழகத்துக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் நேரடி மோதல்கள் மற்றும் தமிழக அரசியலில் பூகம்பங்களை ஏற்படுத்தும் 'டாஸ்மாக்' ஊழல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

page 29 from 42