Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
ஆஸ்திரேலியர்கள் எந்த நாடுகளுக்கு செல்ல விசா தேவை?
14/01/2025 Duration: 02minஆஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் வெளிநாடு செல்லத் திட்டமிடும்போது எந்தெந்த நாடுகளுக்கு விசா தேவைப்படும் என்பதை அறிந்துகொள்வது முக்கியம். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Autism உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவென நாட்டின் முதலாவது தேசிய திட்டம் அறிவிப்பு
14/01/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 14/01/2025) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
ஜப்பான் உட்பட உலகெங்கிலும் கொண்டாடப்படும் தைப்பொங்கல் !
13/01/2025 Duration: 14minசமூகவியல், இதழியல் என்பவற்றில் பட்டம் பெற்று தமிழ் நாட்டில் இயற்கை வேளாண்மை விஞ்ஞானியாகக் கடமையாற்றும் பாமயன், மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், வேளாண்மையில், முக்கியமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு அது குறித்து இலங்கையில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வரும் நடராஜா பிரபு, மற்றும் இந்தியாவில் சென்னையில் இயங்கும் ஆசியவியல் மையத்தின் நிறுவனர் Dr ஜான் சாமுவேல் ஆகியோரின் கருத்துகளுடன் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
13/01/2025 Duration: 09minகேரளாவில் 18 வயது மாணவி 64 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை - 20 பேர் கைது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்புகளை ஏற்படுத்தி வரும் சீமானின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு - தமிழகம் முழுவதும் சீமான் மீது வழக்கு பதிவு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்!
-
சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க முடியுமா?
13/01/2025 Duration: 09minதவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்காக அதன் தளங்களான Facebook, Instagram மற்றும் Threads என்பவற்றில் Elon Musk தனது தளமான Xஇல் அறிமுகப்படுத்தியது போன்ற ஒரு தீர்வை செயல்படுத்துவதாக Metaவின் நிறுவனர் Mark Zuckerberg அறிவித்தார்.
-
இஸ்ரேல்-ஆஸ்திரேலியா உறவைச் சரிசெய்ய பாடுபடப்போவதாக Peter Dutton தெரிவிப்பு!
13/01/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 13/01/2025) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய, உலக நிகழ்வுகளின் இந்த வார தொகுப்பு
11/01/2025 Duration: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (5 – 11 ஜனவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 11 ஜனவரி 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
How can we stop domestic violence at the start? - குடும்ப வன்முறையை ஆரம்பத்திலேயே எப்படி தடுக்கலாம்?
11/01/2025 Duration: 11minHow can we help raise children to be respectful partners when social media has such a strong influence? Learn how to talk to young people and encourage open conversations to ensure that we end gender-based violence. - குடும்ப வன்முறையை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டுமெனில் இதற்கான மாற்றத்தை நமது வீடுகளிலிருந்தே தொடங்க வேண்டும். அதாவது ஒருவரையொருவர் மரியாதையாக நடத்தும் பழக்கத்தை நமது வீட்டிலிருந்தே தொடங்குவதுடன் நம் குழந்தைகளை மரியாதைக்குரிய மற்றும் பரிவுள்ள நபர்களாக வளர்ப்பதும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொடர்பில் ஆஸ்திரேலிய அரசின் பிரச்சாரமான Stop it at the Start அனுசரணையுடன் SBS வழங்கும் விவரணத்தை தமிழில் முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நவுரு புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை ஆஸ்திரேலியா மீறியுள்ளது- ஐ.நா குழு
11/01/2025 Duration: 02minநவுரு தீவில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை ஆஸ்திரேலியா மீறியுள்ளது என்று ஐ நா மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Greenland நாட்டை அமெரிக்கா கையகப்படுத்தும் என்று Trump கூறுவதன் பின்னணி என்ன?
10/01/2025 Duration: 10minஐக்கிய நாட்டு சபையின் உறுப்பினர் நாடாகவும், டென்மார்க் நாட்டின் அதீத சுயாட்சி கொண்ட பிராந்தியமாகவும் இருக்கும் Greenland தீவு நாட்டை அமெரிக்கா விலைக்கு வாங்கும் அல்லது கையகப்படுத்தும் என்று அமெரிக்காவில் விரைவில் அதிபராக பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பதன் பின்னணி என்ன? தகவல்களோடு அலசுகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
10/01/2025 Duration: 08minதமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் ஒருமித்து செயற்பட தமிழ் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை. ஜெனிவா தீர்மானததை நிறைவேற்றுவது குறித்து இலங்கை தமிழரசு கட்சி அமெரிக்க தூதுவரை சந்தித்து பேச்சு. மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் கையெழுத்துப் போராட்டம் இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
Australian political leaders wish Tamils for Tamil Heritage Month - ஆஸ்திரேலியாவில் தமிழ் மரபு மாதம் கொண்டாடப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
10/01/2025 Duration: 07minIn a statement released on Tuesday, January 7, 2025, The Australian Prime Minister, Anthony Albanese states, “I am delighted to send warmest wishes to the Tamil Australian Community as you celebrate Thai Pongal and Tamil Heritage Month.” The opposition leader, Peter Dutton has also shared similar sentiments. - “தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபு மாதத்தைக் கொண்டாடும் தமிழ் ஆஸ்திரேலிய சமூகத்திற்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று ஜனவரி 7, 2025, செவ்வாய் கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் பிரதமர் அந்தோனி அல்பனீஸி குறிப்பிட்டுள்ளார். இது போன்ற ஒரு செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனும் வெளியிட்டுள்ளார்.
-
13 நாட்கள் காணாமல் போன 23 வயது இளைஞர் மீண்டும் புதர்நடை செல்ல ஆர்வம்
10/01/2025 Duration: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 10 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை
-
சீனாவில் பரவி வரும் HMPV தொற்றுப் பற்றிய ஒரு பார்வை
09/01/2025 Duration: 06minசீனாவில் புதிய தொற்றுப் பரவல் தொடர்பிலான எச்சரிக்கை சமூக ஊடகங்களில் பரவி, உலகெங்கும் கவலையைக் கிளப்பியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Australians may have spotted images of busy hospital waiting rooms in China on their social media feeds in recent days, alongside warnings of a "new virus" spreading through the world's second most populous country.
-
சிட்னி வந்துகொண்டிருந்த விமானத்தினுள் இடையூறு விளைவித்த இந்தியர் கைது
09/01/2025 Duration: 02minஇந்தியாவின் பெங்களூரிலிருந்து சிட்னி வந்துகொண்டிருந்த விமானத்தினுள் இடையூறு விளைவித்த இந்தியர் ஒருவர் மீது வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
“It is a struggle… and I wanted to show the way it is” - “பனந்தோப்பல்ல.... பனைமரக்காடு!”
09/01/2025 Duration: 24min“Panaimarakkādu” is a full-length feature film entirely produced in the war-torn Northern part of Sri Lanka. Navaratnam Kesavarajah, the director of the movie, “Panaimarakkādu”, talks to Kulasegaram Sanchayan about the movie and his experience in making it in 2018. - முழுக்க முழுக்க இலங்கையின் வட பகுதியில் தயாராகி, அண்மையில் வெளியாகியிருக்கும் முளு நீளத் திரைப்படம் “பனைமரக்காடு.”.
-
இந்த வருடம் காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு அதிகம். தடுப்பூசி போடும்படி உங்களிடம் கோரிக்கை
09/01/2025 Duration: 06minபல தடுப்பூசிகள் போட்டுக் கொண்டதால் ஏற்படும் மனக் கசப்பு காரணமாக பலர் தடுப்பூசி போடுவதைத் தவிர்த்து வருகிறார்கள். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாழ்பவர்களுக்கு இலவச தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அவற்றை உரிய நேரத்தில் போட்டுக் கொள்ளும்படி அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
நாட்டின் சர்வதேச கல்வித் துறை வளர்ச்சி காணுமா?
09/01/2025 Duration: 07minகடந்த ஆண்டின் இறுதியில், ஆஸ்திரேலியாவின் சர்வதேச கல்வித் துறை ஒரு புதிய மைல் கல்லை எட்டியது. இருப்பினும், கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட தரவுகள், இந்தத் துறையின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுப்பியுள்ளதுடன் வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.
-
'வரலாறு காணாத இயற்கைப் பேரழிவு': லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் குறைந்தது இரண்டு பேர் பலி
09/01/2025 Duration: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 09 ஜனவரி 2025 வியாழக்கிழமை
-
பிரிட்டன் செல்லும் ஆஸ்திரேலிய பயணிகளுக்கு இன்று முதல் புதிய நடைமுறை
08/01/2025 Duration: 02minபிரிட்டன் செல்லும் ஆஸ்திரேலிய பயணிகள் Electronic Travel Authorisation (ETA) எனப்படும் பயண அனுமதி பெறவேண்டுமென்ற நடைமுறை இன்று முதல் கட்டாயமாக்கப்படுகிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.