Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
ஆஸ்திரேலியா அறிவோம்: Big Bananaவின் கதையும், சிறப்பும்!
23/05/2025 Duration: 10minசிட்னிக்கும் கோல்டு கோஸ்ட்க்கும் இடையை இருக்கும் காவ்ஸ் ஹார்பர் (Coffs Harbour) என்ற இடத்தில் அமைந்துள்ள பிக் பனானா என்ற பொழுதுபோக்கு தளத்தின் வரலாறு, அதில் உள்ள பல்வேறு சுவையான அம்சங்கள், அது எப்படி ஆஸ்திரேலியாவின் ஒரு சின்னமாக விளங்குகிறது என்பன போன்ற தகவல்களை “ஆஸ்திரேலியா அறிவோம்” எனும் தொடர் வழி தருகிறார் உயிர்மெய்யார்.
-
NSW வடக்கு பகுதிகளில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மூன்று பேர் உயிரிழப்பு!
23/05/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 23/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
22/05/2025 Duration: 08minமுல்லைத்தீவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள்; வன்னியில் காணி சுவீகரிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகள் இணைந்து கண்டனம்; சர்வதேச தேயிலை தினத்தில் உரிமை கோரி மலையக தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
NSWஇல் வாடகைக்குக் குடியிருப்போருக்கான புதிய சட்ட மாற்றங்கள்
22/05/2025 Duration: 06minNSW மாநிலத்தில், வாடகைக்குக் குடியிருப்போருக்கு சாதகமான புதிய சட்ட மாற்றங்கள் இம்மாதம்(May 2025) 19ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இனி உங்களை வேலைக்கு எடுப்பது AI யின் முடிவைப் பொறுத்து அமையலாம்!
22/05/2025 Duration: 09minவேலைக்கு ஒருவரை தெரிவு செய்வதில் AI - Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு நேரடியாக களம் இறங்கியுள்ளது. AI கருவிகளைப் பயன்படுத்தி திறமையாளர்களை மதிப்பீடு செய்து, நேர்முகம் செய்து பணிக்கு அமர்த்தும் முறை ஆஸ்திரேலியாவில் பல மடங்கு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
நீங்கள் பரோட்டா/கொத்து ரொட்டி பிரியரா? இது உங்களுக்குத்தான்!
22/05/2025 Duration: 06minமைதா மாவில் உருவாகும் பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களை நாம் ஏன் தவிர்க்கவேண்டும் என்று விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு. சிவராமன் அவர்கள் வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
2025ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர்!
22/05/2025 Duration: 03minஇந்திய எழுத்தாளர் பானு முஷ்டாக் இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வையால் பார்வையிழப்பு ஏற்படுமா?
22/05/2025 Duration: 12minஒருவருக்கு தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைப் பற்றியும் இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னி ரயில் சேவை இயல்புக்கு திரும்பியது, திங்கள் பயணம் இலவசம்!
22/05/2025 Duration: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 22 மே 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
அழிந்து வரும் தேனீக்கள் - பாதுகாக்க வேண்டிய அவசியம்
22/05/2025 Duration: 13minமே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேனீக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள், எவ்வாறு தேனீக்களை பாதுகாப்பது மற்றும் வீட்டில் எவ்வாறு தேனீக்கள் வளர்ப்பது போன்ற பல தகவல்களை எடுத்து வருகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
தமிழ் சிறுகதையின் தந்தை!
21/05/2025 Duration: 02min‘காவியத்துக்கு ஒரு கம்பன், கவிதைக்கு ஒரு பாரதி எனின், சிறுகதைக்கு ஒரு புதுமைப்பித்தன்’ என்று இலக்கியத்தின் பேராளுமை ஜெயகாந்தன் குறிப்பிடுகிறார். அப்படியான தமிழ் சிறுகதையின் முன்னோடியான புதுமைப்பித்தன் குறித்த “காலத்துளி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
நாடுகடத்தப்படுவதற்காக சிட்னி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிச்சென்ற நபர்- பிந்திய தகவல்
21/05/2025 Duration: 02minசிட்னி விலவூட் குடிவரவு தடுப்புமுகாமிலிருந்து சிட்னி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிச்சென்ற நபர் குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கையில் உள்ள முதியோர் நல மேம்பாட்டிற்காக சிட்னியில் 'Charity Walk'
21/05/2025 Duration: 10minJaffna Medical Faculty Overseas Alumini – Australia Doctors Charity Fund இலங்கையில் உள்ள முதியோர் நல மேம்பாட்டிற்காக சிட்னியில் நடத்தவுள்ள Charity Walk நிதிதிரட்டும் நடைபயணம் குறித்து உரையாடுகிறார்கள் சிட்னியில் Westmead மருத்துவமனையில் முதியோர் நல மருத்துவராக பணியாற்றிவரும் டாக்டர் பூரணி முருகானந்தம் மற்றும் Hunter New England Health Care Services-இல் Emergency Physician-ஆக பணியாற்றிவரும் டாக்டர் புஷ்பகுமார் பூர்ணலிங்கம். அவர்களோடு உரையாடுகிறார் செல்வி.
-
வட்டி வீதம் குறைந்ததால் வீடுகளின் விலை அதிகரிக்குமா?
21/05/2025 Duration: 07minஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி (RBA) வட்டி வீதத்தை 3.85 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த வட்டி வீத குறைப்பு வீடுகளின் விலையை அதிகரிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
பயங்கரவாதியாக முன்பு அறிவித்துவிட்டு இப்போது அமெரிக்காவும், மேற்கும் கைகுலுக்குவது ஏன்?
21/05/2025 Duration: 11minசிரியா நாட்டின் புதிய அதிபர் Ahmed al- Sharra வின் தலைக்கு 10 மில்லியின் டாலர் சன்மானம் தரப்படும் என்று அமெரிக்கா கூறி வந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் அவரோடு கைகுலுக்கிக்கொள்கின்றன. இதற்கான காரணத்தையும், வரலாற்றுப் பின்னணியையும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
இலங்கை அகதி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு: இந்த வார தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி
21/05/2025 Duration: 07minவங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய கட்டுப்பாடு விதித்துள்ள இந்தியா; இந்தியாவில் மீண்டும் கோவிட் தொற்று; இந்தியா என்ன தர்ம சத்திரமா என்று இலங்கை அகதி வழக்கில் உச்சநீதிமன்றம் வெளியிட்டிருக்கும் கருத்து; நீட் தேர்வு பயத்தால் தமிழக மாணவர் தற்கொலை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
NSW mid north coast பகுதியில் மழை வெள்ள அச்சுறுத்தல்
20/05/2025 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 21/05/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
-
Have you been told your visa will be cancelled? This is how misinformation enables visa abuse - SBS Examines : தவறான தகவல்களினால் விசா குறித்த பயம் - விசா முறைகேடு நடைபெற உதவுகிறதா?
20/05/2025 Duration: 07minThe migration system is complex and confusing. Experts say a lack of accessible support and credible information is leading to visa abuse. - ஆஸ்திரேலியாவில் நீங்கள் விசா ஒன்று பெற்று சட்டரீதியாக வசித்து வருகிறீர்களா? உங்களின் விசா ரத்து செய்யப்படுவதற்கோ அல்லது நீங்கள் நாடு கடத்தப்படுவதற்கோ நீங்கள் உண்மையில் பிழையாக என்ன செய்திருக்க வேண்டும்.
-
நாட்டின் வட்டி வீதம் மீண்டும் குறைக்கப்பட்டது!
20/05/2025 Duration: 02minஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நூற்றாண்டுகால லிபரல்-நேஷனல் கூட்டணி முறிந்தது!
20/05/2025 Duration: 02minநேஷனல் கட்சி லிபரல் கட்சியுடன் மீண்டும் கூட்டணி ஒப்பந்தத்தில் இணையாது என்று நேஷனல் தலைவர் Littleproud அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.