Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
உள்ளூர் விமானக் கட்டணங்கள் குறைகின்றன
29/05/2025 Duration: 06minவிமான எரிபொருளின் விலைகள் குறைவாக உள்ள காரணத்தினால் Domestic Airlines உள்நாட்டு விமானச் சேவைகளின் விமானக் கட்டணங்கள் குறைத்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
சிரிப்பு யோகா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
29/05/2025 Duration: 17minயோகாவில் பல வகைகள் இருப்பதை நாம் அறிவோம். இது சற்றுவித்தியாசமான சிரிப்பு யோகா. இதை பல இடங்களில் பரப்பி வருகிறார் சிரிப்பானந்தா. அவருடன் தொலைபேசிவழி உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
NT காவல்துறை கட்டுப்பாட்டில் உயிரிழந்த பூர்வீகக்குடி இளைஞர்: சுயாதீன விசாரணைக்கு அழைப்பு
29/05/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 29/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
லிபரல்- நேஷனல் கட்சிகள் மீண்டும் இணைந்தன!
28/05/2025 Duration: 02minலிபரல் கட்சியும் நஷனல் கட்சியும் மீண்டும் கூட்டணியாக இணைந்துள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
கைலாய மலை கிரிவலம் செல்வது எப்படி? : விரிவான தகவல்
28/05/2025 Duration: 17minகைலாய மலையை சுற்றிய பரிக்கரமா(கிரிவலம்) நடை பயணம் சிறப்பானது என்பது பலரது நம்பிக்கை. கைலாய மலை பரிக்கரமா நடை பயணம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ள Touch Kailash Australiaவை சேர்ந்த செல்வராஜ் ராஜேந்திரன் அவர்கள் கைலாய மலைக்கு குழுவாக அழைத்து செல்லும் பணியும் செய்துவருகிறார். கடந்த ஆண்டு கைலாய மலை சென்று திரும்பியுள்ள 15 வயதான தியானா மற்றும் செல்வராஜ் ராஜேந்திரன் இருவரும் SBS ஒலிப்பதிவுக்கூடம் வரை வந்து தங்களின் பயண அனுபவங்கள் மற்றும் கைலாய மலை பயணத்திற்கு எப்படி தயாராக வேண்டும் மேலும் அதில் உள்ள சவால்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவாக உரையாடுகிறார்கள். அவர்களோடு உரையாடுகிறார் செல்வி.
-
Would you consider nominating someone for an Order of Australia? - Order of Australia விருதுக்கு ஒருவரை பரிந்துரைப்பது எப்படி?
28/05/2025 Duration: 09minDo you know someone who makes an extraordinary impact in the community? It could be a person from any background or field of endeavour. You can help celebrate their achievements by nominating them for an Order of Australia. The more we recognise extraordinary members within our communities, the more Australia’s true diversity is reflected in the Australian honours list. - எமது சமூகத்திலுள்ள சாதாரண உறுப்பினர்களின் சிறந்த சாதனைகளைக் கொண்டாடுவது ஏன் முக்கியம் என்பது தொடர்பிலும், அவர்களை Order of Australia விருதுக்கு எப்படி பரிந்துரைக்கலாம் என்பது தொடர்பிலும், Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
விக்டோரியாவில் வெட்டுக்கத்திகளின் விற்பனைக்குத் தடை: பின்னணி என்ன?
28/05/2025 Duration: 06minவிக்டோரியா மாநிலத்தில், மே 28 புதன்கிழமை மதியம் முதல், Machete எனப்படும் வெட்டுக்கத்திகளின் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி
28/05/2025 Duration: 09minஇந்தியாவில் நிதி ஆயோக் கூட்டம் தொடர்பாக திமுக- அதிமுக கட்சிகளின் தொடரும் காரசார விவாதம்; சென்னை அடையார் ஆற்றங்கரை பகுதியில் வீடுகள் இடிப்பும், எதிர்ப்பும்; மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர் உள்பட பலர் சுட்டுக்கொலை; ஆவணங்களற்ற குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்ட வங்கதேசிகளை நாடுகடத்தியுள்ள இந்தியா உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
NSW வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்
27/05/2025 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 28/05/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
-
விக்டோரிய நிதிநிலை அறிக்கை: அகதிகள் தொடர்பில் என்ன உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன?
27/05/2025 Duration: 02min2025–26 விக்டோரிய நிதிநிலை அறிக்கையில் அகதிகள் தொடர்பில் என்னென்ன உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நாட்டின் சில பகுதிகளில் ஜூலை முதல் மின்சார கட்டணம் உயருகிறது!
27/05/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 27/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
மறதி நோய்க்கான புதிய மருந்து ஆஸ்திரேலியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது
27/05/2025 Duration: 02minஅல்சைமர் நோயின் தீவிரத்தன்மையை மெதுவாக்கும் ஒரு மருந்து ஆஸ்திரேலியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Who are the Stolen Generations? - திருடப்பட்ட தலைமுறையினர்: வரலாறு என்ன?
26/05/2025 Duration: 11minAustralia has a dark chapter of history that many are still learning about. Following European settlement, Aboriginal and Torres Strait Islander children were removed from their families and forced into non-Indigenous society. The trauma and abuse they experienced left deep scars, and the pain still echoes through the generations. But communities are creating positive change. Today these people are recognised as survivors of the Stolen Generations. - ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம் உள்ளது, அதைப் பற்றி பலர் இன்னமும் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதுதொடர்பில் Melissa Compagnoni மற்றும் Rachael Knowles இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
SBS வானொலிக்கு வயது 50!
26/05/2025 Duration: 12minSBS வானொலி 50 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இவ்வேளையில் SBS தமிழ் ஒலிபரப்பு கடந்துவந்த பாதையை விளக்கும் விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
26/05/2025 Duration: 09minஉலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது; டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்க துறை விசாரணைக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை; நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு - இ.டி விசாரணைக்கு பயந்து ஸ்டாலின் பங்கேற்றதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
AI ஐ பயன்படுத்தி நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள்?
26/05/2025 Duration: 09minஇணையம், மொபைல் என்று பல வழிகளில் ஒருவர் எமாற்றப்படுவதும், Scam போன்ற மீள முடியாத சிக்க்களில் மாட்டிக்கொள்வதும் அதிகரித்து வருகிறது. இந்த பின்னணியில் நாம் எப்படி எச்சரிக்கையாக இருப்பது என்று விளக்குகிறார் Cyber Risk Senior Manager, Master of Cybersecurity and Forensics எனும் தகுதிகள் கொண்ட C. செந்தில் அவர்கள். அவர் University of Sunshine Coastயில் இணைய பாதுகாப்பு குறித்த கல்வியாளர் ஆவார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். நீங்கள் scam – மோசடி கும்பலினால் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்ந்தவுடன் IDCARE அமைப்பை 1800 595 160 எனும் இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
-
ஆஸ்திரேலியாவில் இன்று தேசிய மன்னிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது
26/05/2025 Duration: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 26/05/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
அதிக Superannuationக்கு வரி : நீங்கள் பாதிக்கப்படுவீர்களா?
26/05/2025 Duration: 06min$3 மில்லியனுக்கும் அதிகமான இருப்பு உள்ள Superannuation ஓய்வூதிய கணக்குகள் ஈட்டும் வருவாய் மீதான வரியை 15 சதவீத்திற்கு பதிலாக 30 சதவீதமாக இரட்டிப்பாக்கும் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்படாமல் போன நிலையில் தற்போது புதிய நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
24/05/2025 Duration: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (18 மே – 24 மே 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 24 மே 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
இந்த வார உலகம்: அமெரிக்கா-தென்னாப்பிரிக்கா, மியான்மார், வடகொரியா & பாகிஸ்தான்-இந்தியா
23/05/2025 Duration: 07minஇந்தியா- பாகிஸ்தான் இடையே தொடரும் சிந்து நதி நீர் பங்கீடு விவகாரம்; காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்; தென்னாப்பிரிக்காவில் 'வெள்ளை இனப்படுகொலை’ பற்றிய அமெரிக்க அதிபரின் கேள்விக்கு பதிலளித்த தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா; போர்க்கப்பல் விபத்தை 'குற்றச் செயல்' என்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங்; மியான்மரில் ராணுவ அரசாங்கத்துக்கும் ஜனநாயகத்தை கோரும் எதிர் தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.