Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
விக்டோரிய நிதிநிலை அறிக்கை: அகதிகள் தொடர்பில் என்ன உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன?
27/05/2025 Duration: 02min2025–26 விக்டோரிய நிதிநிலை அறிக்கையில் அகதிகள் தொடர்பில் என்னென்ன உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நாட்டின் சில பகுதிகளில் ஜூலை முதல் மின்சார கட்டணம் உயருகிறது!
27/05/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 27/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
மறதி நோய்க்கான புதிய மருந்து ஆஸ்திரேலியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது
27/05/2025 Duration: 02minஅல்சைமர் நோயின் தீவிரத்தன்மையை மெதுவாக்கும் ஒரு மருந்து ஆஸ்திரேலியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Who are the Stolen Generations? - திருடப்பட்ட தலைமுறையினர்: வரலாறு என்ன?
26/05/2025 Duration: 11minAustralia has a dark chapter of history that many are still learning about. Following European settlement, Aboriginal and Torres Strait Islander children were removed from their families and forced into non-Indigenous society. The trauma and abuse they experienced left deep scars, and the pain still echoes through the generations. But communities are creating positive change. Today these people are recognised as survivors of the Stolen Generations. - ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம் உள்ளது, அதைப் பற்றி பலர் இன்னமும் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதுதொடர்பில் Melissa Compagnoni மற்றும் Rachael Knowles இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
SBS வானொலிக்கு வயது 50!
26/05/2025 Duration: 12minSBS வானொலி 50 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இவ்வேளையில் SBS தமிழ் ஒலிபரப்பு கடந்துவந்த பாதையை விளக்கும் விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
26/05/2025 Duration: 09minஉலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது; டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்க துறை விசாரணைக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை; நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு - இ.டி விசாரணைக்கு பயந்து ஸ்டாலின் பங்கேற்றதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
AI ஐ பயன்படுத்தி நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள்?
26/05/2025 Duration: 09minஇணையம், மொபைல் என்று பல வழிகளில் ஒருவர் எமாற்றப்படுவதும், Scam போன்ற மீள முடியாத சிக்க்களில் மாட்டிக்கொள்வதும் அதிகரித்து வருகிறது. இந்த பின்னணியில் நாம் எப்படி எச்சரிக்கையாக இருப்பது என்று விளக்குகிறார் Cyber Risk Senior Manager, Master of Cybersecurity and Forensics எனும் தகுதிகள் கொண்ட C. செந்தில் அவர்கள். அவர் University of Sunshine Coastயில் இணைய பாதுகாப்பு குறித்த கல்வியாளர் ஆவார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். நீங்கள் scam – மோசடி கும்பலினால் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்ந்தவுடன் IDCARE அமைப்பை 1800 595 160 எனும் இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
-
ஆஸ்திரேலியாவில் இன்று தேசிய மன்னிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது
26/05/2025 Duration: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 26/05/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
அதிக Superannuationக்கு வரி : நீங்கள் பாதிக்கப்படுவீர்களா?
26/05/2025 Duration: 06min$3 மில்லியனுக்கும் அதிகமான இருப்பு உள்ள Superannuation ஓய்வூதிய கணக்குகள் ஈட்டும் வருவாய் மீதான வரியை 15 சதவீத்திற்கு பதிலாக 30 சதவீதமாக இரட்டிப்பாக்கும் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்படாமல் போன நிலையில் தற்போது புதிய நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
24/05/2025 Duration: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (18 மே – 24 மே 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 24 மே 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
இந்த வார உலகம்: அமெரிக்கா-தென்னாப்பிரிக்கா, மியான்மார், வடகொரியா & பாகிஸ்தான்-இந்தியா
23/05/2025 Duration: 07minஇந்தியா- பாகிஸ்தான் இடையே தொடரும் சிந்து நதி நீர் பங்கீடு விவகாரம்; காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்; தென்னாப்பிரிக்காவில் 'வெள்ளை இனப்படுகொலை’ பற்றிய அமெரிக்க அதிபரின் கேள்விக்கு பதிலளித்த தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா; போர்க்கப்பல் விபத்தை 'குற்றச் செயல்' என்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங்; மியான்மரில் ராணுவ அரசாங்கத்துக்கும் ஜனநாயகத்தை கோரும் எதிர் தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலியா அறிவோம்: Big Bananaவின் கதையும், சிறப்பும்!
23/05/2025 Duration: 10minசிட்னிக்கும் கோல்டு கோஸ்ட்க்கும் இடையை இருக்கும் காவ்ஸ் ஹார்பர் (Coffs Harbour) என்ற இடத்தில் அமைந்துள்ள பிக் பனானா என்ற பொழுதுபோக்கு தளத்தின் வரலாறு, அதில் உள்ள பல்வேறு சுவையான அம்சங்கள், அது எப்படி ஆஸ்திரேலியாவின் ஒரு சின்னமாக விளங்குகிறது என்பன போன்ற தகவல்களை “ஆஸ்திரேலியா அறிவோம்” எனும் தொடர் வழி தருகிறார் உயிர்மெய்யார்.
-
NSW வடக்கு பகுதிகளில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மூன்று பேர் உயிரிழப்பு!
23/05/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 23/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
22/05/2025 Duration: 08minமுல்லைத்தீவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள்; வன்னியில் காணி சுவீகரிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகள் இணைந்து கண்டனம்; சர்வதேச தேயிலை தினத்தில் உரிமை கோரி மலையக தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
NSWஇல் வாடகைக்குக் குடியிருப்போருக்கான புதிய சட்ட மாற்றங்கள்
22/05/2025 Duration: 06minNSW மாநிலத்தில், வாடகைக்குக் குடியிருப்போருக்கு சாதகமான புதிய சட்ட மாற்றங்கள் இம்மாதம்(May 2025) 19ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இனி உங்களை வேலைக்கு எடுப்பது AI யின் முடிவைப் பொறுத்து அமையலாம்!
22/05/2025 Duration: 09minவேலைக்கு ஒருவரை தெரிவு செய்வதில் AI - Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு நேரடியாக களம் இறங்கியுள்ளது. AI கருவிகளைப் பயன்படுத்தி திறமையாளர்களை மதிப்பீடு செய்து, நேர்முகம் செய்து பணிக்கு அமர்த்தும் முறை ஆஸ்திரேலியாவில் பல மடங்கு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
நீங்கள் பரோட்டா/கொத்து ரொட்டி பிரியரா? இது உங்களுக்குத்தான்!
22/05/2025 Duration: 06minமைதா மாவில் உருவாகும் பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களை நாம் ஏன் தவிர்க்கவேண்டும் என்று விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு. சிவராமன் அவர்கள் வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
2025ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர்!
22/05/2025 Duration: 03minஇந்திய எழுத்தாளர் பானு முஷ்டாக் இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வையால் பார்வையிழப்பு ஏற்படுமா?
22/05/2025 Duration: 12minஒருவருக்கு தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைப் பற்றியும் இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னி ரயில் சேவை இயல்புக்கு திரும்பியது, திங்கள் பயணம் இலவசம்!
22/05/2025 Duration: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 22 மே 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.