Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
NBN - Amazon இணைந்து தொலைதூரப் பகுதிகளுக்கு உயர்-வேக இணைய சேவை
15/08/2025 Duration: 06minநாட்டின் இணைய சேவையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு செய்தி, மற்றும் ஆஸ்திரேலியர்கள் விரைவான இணையத்தை பெற அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும் என NBN நிறுவனத்தின் தலைவர் கூறியிருப்பது போன்றவற்றின் செய்தியின் பின்னியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Government-owned NBN Co has partnered with Amazon to roll out high-speed broadband using 3,200 low Earth orbit (LEO) satellites from Amazon's Project Kuiper. NBN Co says 300,000 homes and businesses in regional, rural, and remote Australia will be able to access faster internet.
-
‘$1 பில்லியனுக்கும் மேல் ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொரு ஆண்டும் சேமிக்க முடியும்’ - ஆஸ்திரேலிய வணிக கவுன்சில்
15/08/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 15/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலியாவின் சின்னமான அகுப்ரா தொப்பி உருவான கதை!
15/08/2025 Duration: 10minஆஸ்திரேலியாவின் பல்வேறு வாழ்க்கைப் பணிகளில் இருப்பவர்கள் பயன்படுத்தும் ஆஸ்திரேலியாவின் சின்னமான அகுப்ரா தொப்பி (Akubra hat), யின் வரலாறு, பயன்பாடு, தனித்தன்மை என்று பல தகவல்களை விவரிக்கிறார் உயிர்மெய்யார்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
14/08/2025 Duration: 08minஇலங்கையில் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சி; மன்னார் மக்களின் நீண்ட நாட்கள் போராட்டங்களுக்குப் பின்னர் காற்றாலை மின்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
14/08/2025 Duration: 09minகாசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்; டிரம்ப்- புடின் சந்திப்பு; ஈராக்கில் உள்ள குர்து அகதிகள் துருக்கிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு; சிரிய அரசு- சிரிய குர்து படை இடையே தொடரும் முறுகல் நிலை; இஸ்ரேல்-அமெரிக்கா உடனான போரின் போது 21 ஆயிரம் சந்தேக நபர்கள் கைது- ஈரான்; காங்கோ ஆயுதக்குழுவுக்கு தடைவிதித்த அமெரிக்கா; இந்தியா- சீனா இடையே சுமூகமாகும் உறவு; இந்தியா- பாகிஸ்தான் இடையிலான தண்ணீர் யுத்தம்; வாசிங்கடன் காவல்துறை கட்டுப்பாட்டை கையில் எடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலியர்களின் விருப்பத்திற்குரிய மற்றும் மலிவான பல்பொருள் அங்காடி எது?
14/08/2025 Duration: 02minஆஸ்திரேலியர்களின் விருப்பத்திற்குரிய சூப்பர்மார்க்கெட்டாக Aldi மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Azaria Chamberlain, Uluru மலையடிவாரத்தில் காணாமல் போனது 17/08/1980
14/08/2025 Duration: 03min1980ம் ஆண்டு ஆகஸ்து மாதம் 17ம் நாள் Azaria Chamberlain, Uluru மலையடிவாரத்தில் காணாமல் போனது குறித்த காலத்துளி நிகழ்ச்சி படைத்தவர், குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலியாவில் பாலியல் துன்புறுத்தலுக்காக வழங்கப்பட்ட அதி கூடிய இழப்பீடு!
14/08/2025 Duration: 09minபணியிட பாலியல் துன்புறுத்தல் விவகாரங்களில், ஃபெடரல் நீதிமன்றம் இந்த மாத தொடக்கத்தில், பாலியல் துன்புறுத்தல், பாதிக்கப்பட்டவர்களைப் பழிவாங்குதல் மற்றும் மோசமான சேதங்களுக்காக நேபாள பின்னணி கொண்ட Biplavi Jarga Magar என்பவருக்கு பாலியல் துன்புறுத்தலுக்காக ஆஸ்திரேலியாவில் வழங்கப்பட்ட அதி கூடிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
‘போரை நிறுத்த Putin ஒப்புக் கொள்ளாவிட்டால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும்’ – அமெரிக்க அதிபர்
14/08/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 14/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்துமா: எப்படி கட்டுப்படுத்துவது? எப்படி குணமாக்குவது?
13/08/2025 Duration: 08minஆஸ்துமா நோயை எப்படிக் கட்டுப்படுத்தலாம், குணமாக்கலாமென்று விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். முதலில் பதிவு செய்யப்பட்ட நாள்: 28 மே 2018.
-
புதிய இந்திய சமூக மையங்களை அமைக்க நிதியுதவி – விக்டோரியா அரசு அறிவிப்பு
13/08/2025 Duration: 02minமெல்பனில் புதிய இந்திய சமூக மையங்களை அமைப்பதற்கு விக்டோரியா அரசு நிதியுதவி வழங்குகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
கீழடியின் பண்டைய வசீகரம்: மறுபிறவி எடுத்த களிமண் காதணிகள்
13/08/2025 Duration: 13minகளி மண்ணிலிருந்து கனவுகளை வடிவமைக்கிறார் நிதுஷா கிருஷன். எளிமையான மண்ணை அற்புதமான ஆபரண நகைகளாக மாற்றும் அவரது படைப்புகள் ஒவ்வொன்றும் பாரம்பரியம், படைப்பாற்றல் மற்றும் மீள் தன்மை ஆகியவற்றின் கலவையாகும். அவரது கைகள் ஆர்வம், பொறுமை மற்றும் அடிப்படையிலிருந்து அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்கும் அழகின் கதைகளைச் சொல்கின்றன. Kiki Collection என்ற நிறுவனத்தை உருவாக்கி, நிதுஷா கிருஷன் தனது படைப்புகளை உலகம் முழுவதும் சந்தைப்படுத்தி வருகிறார். போர்ச் சூழலில் இருந்து மீண்டெழுந்த ஒரு சமுதாயத்தின் அடையாளமாக இருக்கும் நிதுஷா கிருஷன் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலிய பாலஸ்தீன அங்கீகாரத்தால் பயன் உண்டா? ஐ.நா அங்கீகாரம் கிடைக்குமா?
13/08/2025 Duration: 12minபாலஸ்தீனத்தை பல மேற்கத்திய நாடுகள் தனி நாடாக அங்கீகரிக்கவிருக்கும் பின்னணியில், தாமும் அங்கீகரிப்போம் என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதால் என்ன பலன், பாலஸ்தீனத்திற்கு ஐ.நா அங்கீகாரம் கிடைக்குமா எனும் கேள்விகளுடன் அலசுகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் வெங்கடேசன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் – றைசெல்.
-
செய்யாத தவறுக்காக 20 ஆண்டுகள் சிறை அனுபவித்த சிட்னிப் பெண்ணும், இழப்பீடும்!
13/08/2025 Duration: 07minதவறான தீர்ப்பினால் இருபது ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட Kathleen Folbigg என்ற தாய்க்கு NSW அரசு வழங்கும் நட்ட ஈடு போதாது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கையில் இராணுவ முகாம் சென்ற தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு
12/08/2025 Duration: 06minஇலங்கையின் முல்லைத்தீவு, முத்தையன்கட்டு ஊரைச் சார்ந்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ அத்துமீறல்களைக் கண்டித்து வடக்கு, கிழக்கில் பணி புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
VIC: போதைப்பொருள் பாவனையால் உயிரிழப்போர் கடந்த 10 ஆண்டுகளில் உச்சம்
12/08/2025 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 13/08/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு: 30,000 பேருக்கு வேலை; மணிக்கு $61.50 சம்பளம்
12/08/2025 Duration: 02min2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கென ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நாட்டின் வட்டி வீதம் மீண்டும் குறைக்கப்பட்டது!
12/08/2025 Duration: 02minஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது வெறும் அடையாளம் மட்டுமே என்று சில ஆஸ்திரேலியர்கள் கவலை
12/08/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 12/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
Most Australians see migration as a benefit. Is economic stress changing the story? - பெரும்பாலும் ஆஸ்திரேலியர்கள் குடிவரவை வரவேற்கிறார்கள். பொருளாதார அழுத்தம் அதை மாற்றுமா?
11/08/2025 Duration: 07minMigrants and refugees are often blamed for rising cost of living pressures. Is there a way to break the cycle? - வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு புலம்பெயர்ந்தோரும் அகதிகளும் பெரும்பாலும் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வதந்தியை முறியடிக்க ஏதாவது வழி இருக்கிறதா?